அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும்

ஏகத்துவம் செப்டம்பர் 2006

அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும்

ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி.

இன்னும் சில நாட்களில் நம்மிடம்ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம்வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக்காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதுதான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழிகாட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக்காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

(அல்குர்ஆன் 2:185)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும்முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாகநம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல்,ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம்நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

இந்த நோன்பை இறைவன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும்கடமையாக்க வில்லை. மாறாக முன் சென்ற சமுதாயங்களுக்கும் கடமையாக்கிஉள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவ தற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில்நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2:183,184)

இந்த வசனத்தில், நாம் இறையச்சம்உடையவர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவேநோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான்.

எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில்நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்தஇறையச்சம் நம்மிடம் ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கக்கடமைப்பட்டுள்ளோம்.

இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும்.அவனுடைய ஒவ்வொரு செயலிலும், எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம்வெளிப்பட வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது,தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில்ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்றுஎண்ணி, அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கின்றான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச்செய்யத் துவங்கி விடுகின்றான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம்முடிந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்றோ இறைவன்கூறவில்லை.இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும்பொதுவானது தான். எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்கவேண்டும்.

ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்புநோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில்அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட, அவனுக்குப் பிடித்தமான உணவுகள்இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம்.யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம்;எனவே இது நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத்தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான்.

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன்தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம். அப்படிஎன்றால் அடுத்தருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே நாம்யாரையும் ஏமாற்றக் கூடாது; யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம்நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்புகடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான்.

ரமளானின் வணக்கங்கள் மற்ற நாளிலும்…

ரமளான் மாதம் வந்து விட்டால் பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் எனஅனைவருமே வணக்கசாலிகளாக ஆகி விடுவதைப் பார்க்கிறோம். பள்ளிவாசல்கள்நிரம்பி வழியும். சிலநேரங்களில் ஐவேளைத் தொழுகைக்குவழக்கமாகவருபவர்களுக்குக் கூட இடம் கிடைக்காது. அந்த அளவுக்குமக்கள் கூட்டம் அலைமோதும்.

ஏனெனில் ரமளானில் செய்யக் கூடியகாரியங்களுக்கு அதிகமான நன்மைகள்கிடைக்கும் என்று அனைவரும் விளங்கி வைத்துள்ளனர். எனவே ஐவேளைத்தொழுகையிலும் தவறாது கலந்து கொள்வார்கள். இரவில் நன்மையை எதிர்பார்த்துதூக்கத்தைத் தியாகம் செய்து நின்று வணங்குவார்கள்.

யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்றுவணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 37

என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின் அடிப்படையில் ரமளான் மாதத்தில்ஐவேளையும், இரவிலும் தொழுகின்றோம்.

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(அல்குர்ஆன் 51:17,18)

தொழுகையை நிலை நாட்டுங் கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்றுசேர்க்கப் படுவீர்கள்!

(அல்குர்ஆன் 6:72)

ஸலாத்தைப் பரப்புங்கள். உணவு அளியுங்கள். உறவுகளை ஒட்டி வாழுங்கள். மக்கள்தூங்கும் போது தொழுங்கள். நிம்மதியாக சுவனம் செல்வீர்கள் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

நூல்: அஹ்மத் 24193

ரமளானில் தொழச் சொன்ன அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும்தான்ரமளான் அல்லாத காலங்களிலும் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள். எனவேரமளானிலும் ரமளான்அல்லாத காலங்களிலும் நாம் தொழுகைகளைப் பேண வேண்டும்.

அது போன்று ரமளான் மாதத்தில் ஒரு முறையாவது குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்து விட வேண்டும் என்று நாம் போட்டி போடுவோம். ஆனால் ரமளான் முடிந்ததும்இதை ஏறிட்டும் பார்ப்பதில்லை. அது ஏன்? ரமளான்அல்லாத மற்ற நாட்களிலும்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு.

"அல்லாஹ்வின் அருள் மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர்ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்துமடங்குகொண்டதாகும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன்.மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து” என்றுநபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதீ 2910

மேலும் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத்தயாரித்துஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ நம்அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதைஅறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லையே! ஏன்? என்றுநமக்கு நாமே கேட்டு, ரமளான் அல்லாத நாட்களிலும் பசித்தவருக்கு உணவளிக்கவேண்டும்.

நாம் எவ்வளவு வீண் வம்பு செய்பவர்களாக இருந்தாலும், ரமளான் வந்து விட்டால்,நம்மிடம் யார் வம்புக்கு வந்தாலும் கூட, நான் நோன்பாளி என்று விலகிக் கொள்கிறோம்.அதே போன்று ரமளான் முடிந்த பிறகும் செயல்பட நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும்.

இன்று டி.வி. இல்லாத வீடே இல்லைஎன்று சொல்லும் அளவுக்கு எல்லாவீடுகளிலும்டி.வி. உள்ளது. அதிகமான நேரத்தை நாம் அந்த டி.வி.யின் முன்னால் தான்செலவிடுகின்றோம். பள்ளியில் பாங்கு சொல்வது கூட தெரியாமல் சீரியலில்மூழ்கியிருக்கின்றோம்.

ஆனால் ரமளான் மாதத்தில் நம்மில்பலர் சினிமா, சீரியல் பார்ப்பதை விட்டுவிடுகின்றோம். ஏனெனில் நோன்பு நோற்றிருக்கும் போது பொய்யான காரியங்களில்ஈடுபட்டால்எந்தப் பலனும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

"யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில்அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1903

ரமளான் மாதம் முடிந்து விட்டால்மீண்டும் சினிமா சீரியல் என்றுசென்றுவிடுகின்றோமே! இது சரி தானா? நபி (ஸல்) அவர்கள் ரமளானில்மட்டும் தான்பொய்யான காரியங்களை விட்டுத் தடுத்துள்ளார்களா?இல்லையே! எல்லா நாட்களிலும்பொய்யான காரியங்கள் தடுக்கப்பட்டவை தான் என்பதைச் சிந்தித்து மற்ற நாட்களிலும்அவற்றை விட்டு விலகியிருப்போம்.

இன்னும் எத்தனையோ நன்மையான காரியங்களை ரமளானில் மட்டும் செய்யாமல்வாழ்நாள் முழுவதும் செய்வோம். அது போல் அனைத்துத் தீமைகளை விட்டும்ரமளானில் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் விலகியிருப்போம்.

சென்ற ரமளானில் இருந்தவர்கள் இன்று இல்லை. எனவே வல்ல நாயன் இந்தரமளான்மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமளானில் கடைப்பிடிக்கும்காரியங்களைவாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கிவைப்பானாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit