பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

கேள்வி :

பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் ஆக வேண்டுமா? அல்லது வீட்டில் தொழலாமா?

ஏ. ஸபுருன்னிஸா, நாகூர்

பதில் :

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு மட்டும் தான் கட்டாயம். பெண்களுக்கு கட்டாயமில்லை.

பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

سنن أبي داود

567 حدثنا عثمان بن أبي شيبة حدثنا يزيد بن هارون أخبرنا العوام بن حوشب حدثني حبيب بن أبي ثابت عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن .

உங்களுடைய பெண்களை பள்ளிகளுக்கு வருவதை விட்டும் தடுக்காதீர்கள்.  (எனினும்) அவர்களுடைய வீடுகளில் தொழுவது அவர்களுக்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத்

Leave a Reply