ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

ஆதம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

றைவனுக்கு  உருவம்  உண்டு  என்பதற்கு  ஆதாரமாக  இறைவன்  ஆதமை  நோக்கி  தனது கையை  நீட்டினான்  என்ற ஹதீஸை ஆதாரமாகக் கூறினீர்கள். அப்படியானால் ஆதம் இறைவனைப்  பார்த்தார்களா?  எனக்  கேட்கின்றனர் எப்படி பதில் சொல்வது ?

அஷ்ரப்தீன்

பதில்

மேலோட்டமாக பார்த்தால் இது போல் கேள்விகள் எழும். ஆனால் இறைவனை யாரும் பார்த்ததில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் மறுமையில் இறைவனைக் காண முடியும் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

பார்க்க

இறைவனை யாரும் காண முடியாது என்பதற்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.

سنن الترمذي
3368   حدثنا  محمد بن بشار ، قال : حدثنا  صفوان بن عيسى ، قال : حدثنا  الحارث بن عبد الرحمن بن أبي ذباب ، عن  سعيد بن أبي سعيد المقبري ، عن  أبي هريرة  قال : قال رسول الله صلى الله عليه وسلم :  " لما خلق الله آدم، ونفخ فيه الروح عطس، فقال : الحمد لله، فحمد الله بإذنه، فقال له ربه : رحمك الله يا آدم، اذهب إلى أولئك الملائكة إلى ملأ منهم جلوس، فقل : السلام عليكم، قالوا : وعليك السلام ورحمة الله، ثم رجع إلى ربه، قال : إن هذه تحيتك وتحية بنيك بينهم، فقال الله له ويداه مقبوضتان : اختر أيهما شئت، قال : اخترت يمين ربي، وكلتا يدي ربي يمين مباركة، ثم بسطها، فإذا فيها آدم وذريته، فقال : أي رب ما هؤلاء ؟ فقال : هؤلاء ذريتك، فإذا كل إنسان مكتوب عمره بين عينيه، فإذا فيهم رجل أضوءهم أو من أضوئهم، قال : يا رب، من هذا ؟ قال : هذا ابنك داود قد كتبت له عمر أربعين سنة، قال : يا رب، زده في عمره، قال : ذاك الذي كتبت له، قال : أي رب، فإني قد جعلت له من عمري ستين سنة، قال : أنت وذاك، قال : ثم أسكن الجنة ما شاء الله، ثم أهبط منها، فكان آدم يعد لنفسه، قال : فأتاه ملك الموت، فقال له آدم : قد عجلت، قد كتب لي ألف سنة، قال : بلى، ولكنك جعلت لابنك داود ستين سنة، فجحد فجحدت ذريته، ونسي فنسيت ذريته. قال : فمن يومئذ أمر بالكتاب والشهود ".  هذا حديث حسن غريب من هذا الوجه، وقد روي من غير وجه عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم من رواية زيد بن أسلم، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم. 
حكم الحديث:  حسن صحيح

அவன் வலது கையை நீட்டினான். அவனது வலது கையில் ஆதம் (அலை) அவர்களும் உலகம் அழியும் காலம் வரை வக்கூடிய மக்களும் தெரிந்தார்கள் என்று அந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

(திர்மிதி 3368)

ஒரு கைக்குள் பல்லாயிரம் கோடி மக்கள் இருப்பதைக் காணும் அளவுக்கு அல்லாஹ் தனது மாபெரும் தோற்றத்தில் தன் கையை நீட்டினான்.

ஒரு கையே இந்த உலகையெல்லாம் அடக்கிக் கொள்ளும் அளவுக்கு இருந்தது என்றால் அவனது முழுத்தோற்றம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும்?

இது போன்ற நிலையில் அல்லாஹ்வின் கையை ஆதம் (அலை) பார்த்திருந்தால் கையைத் தவிர வேறு எதையும் அவர்கள் பார்த்திருக்க முடியாது.

உதாரணமாக இமயமலை அடிவாரத்தில் இருக்கும் எறும்பு அதன் அடிப்பகுதியில் உள்ள சில பொருட்களைப் பார்த்தாலும் இமயமலையின் உச்சியை அது பார்க்க முடியாது. அம்மலையில் 99.99 சதம் பகுதிகளை அந்த எறும்பால் பார்க்க முடியாது. இமயமலை பிரம்மாண்டமாக இருப்பதாலும் எறும்பு மிகச் சிறியதாக இருப்பதாலும். எறும்பு இமய மலையில் அருகில் இருந்தாலும் இமயமலையைப் பார்க்க முடியாது.

இமயமலைக்கும் எறும்புக்கும்  உள்ள வித்தியாசத்தை விட பலகோடி மடங்கு வித்தியாசம் அல்லாஹ்வுக்கும் ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையில் உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் கையைப் பார்த்தார்கள் என்றால் அதன் பிடம்மாண்டமே அல்லாஹ்வை அவனது திருமுகத்தைப் பார்ப்பதை விட்டும் தடுத்து விடும்.

Leave a Reply