இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள ்கை

ஏகத்துவம் நவம்பர் 2006

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை

எம். ஷம்சுல்லுஹா

இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஏகத்துவஇதழ் ஒருபரேலவிஸ எதிர்ப்பு இதழ் என்றால் அது மிகப் பொருத்தமான ஒன்று தான். அந்தஅளவுக்கு இந்த இதழில் பரேலவிஸத்திற்கு எதிரான கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன.பரேலவிஸத்தைப் பற்றிய இந்தப்பார்வைக்குப் பொறியாக அமைந்ததுசுன்னத் வல்ஜமாஅத் உலமாக்களால்நடத்தப்படும் ஒரு மாத இதழ்.

இந்த உலமாக்கள் அன்று இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல்கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை. மாறாக மத்ஹபுகள் கூடாது என்றுநாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும்ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்குஎதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்தகலீல் அஹ்மது கீரனூரியார் நமக்கு எதிராக போர்முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில்தான் முனைப்புடன் செயல்பட்டார்.தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர்என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணரமுடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மது கீரனூரிநம்மைமேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம்.கொஞ்சம் பிடித்தாவதுவிடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மைவாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும்என்பது போல்இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான்இருக்கிறோம்,அல்ஹம்துலில்லாஹ்!

இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன.இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இதுதமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.

மதுரை ஷரீஅத் மாநாடு

இப்படி நம்மைத் திட்டித் தீர்ப்பதற்காகக் கூட்டிய மாநாடுகளில் நம்மால் மறக்க முடியாதமாநாடு மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்றஷரீஅத் மாநாடு.

1991ம் ஆண்டு, ஜூலை மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.

அம்மாநாட்டின் தலைமைப் பேச்சாளர் கலீல் அஹ்மது கீரனூரி. தலைப்பு, "தராவீஹ் 20ரக்அத்கள்”

அப்போது அவர் பேசிய வெறிப் பேச்சை இப்போது கொஞ்சம் ஒலிபரப்புகிறோம்.

மூலையிலே வண்ணார் பள்ளியிலே (இன்றைய மஸ்ஜிதுல் முபாரக்) ஒளிந்துஇருந்துகொண்டு நீ எங்களைப் பார்த்துப் பேசுகிறாயா? "ஷரீஅத் மாநாடு எதற்காக? மதுவைஒழிக்கவா? விபச்சாரத்தைத் தடுக்கவா? வரதட்சணையைக் கண்டிக்கவா? சாராயக்கடைகளை மூடுவதற்காகவா?”என்றெல்லாம் கேட்டிருக்கிறாயே!இதைக் கேட்பதற்குஉனக்கு என்ன அருகதை இருக்கின்றது. நீ முதலில்இதையெல்லாம் செய்! அப்புறம்எங்களைப் பார்த்துக் கேள் நீ!

கப்ரு அனாச்சாரத்தை நாங்கள் போய் தடுக்க வேண்டுமாம்! இவர் (பி.ஜே.) ஒரு சந்திலேஒதுங்கியிருந்து வெளியே வராமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பாராம். ஏன்?நீபோய் அந்த அனாச்சாரத்தைத் தடுக்க வேண்டியது தானே! எப்போதாவதுதடுத்திருக்கின்றாயா? தடுக்க முயன்று இருக்கின்றாயா? அப்போது நீ வெட்டப்பட்டாயா?நீ கொல்லப்பட்டாயா? யாரிடம் வந்து கதை சொல்கின்றாய்?

இது கீரனூரியார் மதுரை தமுக்கம்மைதானத்தில் நின்று கொண்டு பி.ஜே.வை நோக்கிப்பேசிய பேச்சாகும். பேசுகின்ற நாள் 7.7.1991. பேசுகின்ற நேரம் இரவு சுமார் 10 மணி.

தமுக்கம் மைதானத்தில் கீரனூரியார் இவ்வாறு கொதித்தெழுந்து, கொந்தளித்து, நெருப்புவார்த்தைகளைக் கக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்…

மேலப்பாளையத்தில் மோத்தை மீறாப்பிள்ளை தெருவில் சிப்கத்துல்லாஹ் என்பவரதுவீட்டு வாசலில், "கர்பலா’ என்ற தலைப்பில் பரேலவிஸத்தை எதிர்த்து பி.ஜே.உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

முதலில் தெருவில் தான் மேடை அமைக்கப்பட்டது. மழைக்காலம்! அதனால் தூறல்விழுந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி உரிமையாளர் வந்து, "மைக் மழையில் நனையும்,அதனால் வீட்டு வாசலில் மைக்கை வைப்போம்”என்று சொல்லவே நடுத் தெருவில்நின்ற மைக் வீட்டு வாசலுக்கு வருகின்றது.

அதனால் வீதியில் நின்ற பி.ஜே. வீட்டு வாசலுக்கு வருகின்றார். வீடு கிழக்குத் திசையில்மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நின்று பேசிக்கொண்டிருந்தார். மழைதூறிக் கொண்டிருந்ததால் வீட்டுவாசலுக்கு முன்னால் யாரும்அமரவில்லை.

எதிர் வீடுகளில் உள்ள திண்ணைகளில் தான் ஆட்கள் உட்கார்ந்து பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.எதிர் வீட்டுத் திண்ணையில் உள்ளவர்கள் மட்டும் பி.ஜே.வைப் பார்க்கமுடிந்தது. தெற்கு வடக்குப் பக்கம் உள்ளவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு ஆள் சென்று வரும் இடைவெளி இருந்தது.அப்போது நான் வாசலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய திண்டில் வடக்கு நோக்கிஅமர்ந்திருந்தேன்.

எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், கடுமையான குளிர் என்பதால் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்நேரத்தில் வடக்கில் உள்ள ஒரு சந்திலிருந்து ஒருவர்,ஒரு கையில்லாதவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவது போல் வந்தார்.

வித்தியாசமான அவரை சற்று வியப்புடன் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கும்வேளையில் ஒரு நொடிப் பொழுதில் வீட்டு வாசலுக்கு வந்து, ஒரு வீச்சரிவாளை எடுத்துபி.ஜே.வின் கையில் வீசுகின்றார். அதே வேளையில் எனக்கு அருகில் நின்றஇன்னொருவர் மற்றொரு அரிவாளைத் திருப்பிப் பிடித்து என் இடது கையைத்தாக்குகின்றார். இவ்வாறுஅவர் என்னைத் தாக்குவதற்குக் காரணம், பி.ஜே.வை வெட்டவந்த முதலாமவரை நான் தடுத்து விடக் கூடாதுஎன்பதற்காகத் தான். அரிவாளின் மறுபக்கத்தால் என் கையைத் தாக்கியதால் என் கை வீக்கத்தில் அப்படியே உப்பி விடுகின்றது.

பி.ஜே.யின் இடது கையில் வெட்டியபிறகு, அவரது கழுத்தை நோக்கி மீண்டும்அரிவாளை வீசுகின்ற போது, பி.ஜே. தன் வலது கையால் மைக்கின் கம்பியைத் தூக்கிதடுக்கின்றார். மைக் ஸ்டாண்டின் மீது அரிவாள் பட்டவுடன் ஒரு சப்தம் எழுகின்றது.

அப்போது தான் அதுவரை என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள், அரைத்தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வருவதற்குள்ளாக வந்த இருவரும்ஓட்டமெடுக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்துஓடுகின்றார்கள். ஆனால் அவர்கள் தப்பி விடுகின்றார்கள்.

அல்லாஹ் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால்அதை யார் தான்தடுக்க முடியும்?தெருவின் மத்தியில் போட்ட மேடையில் பேசவிருந்த பி.ஜே. தூறல்விழுந்த காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு உரையாற்றினார். அது தான்அவருக்குப் பாதுகாப்பானது. அதாவது வெட்டு கையுடன் நின்றது. அரிவாளைக் கழுத்துநோக்கி இழுத்து லாவகமாக வீசுவதற்கு வழியில்லாமல் அந்த இடம் குறுகிய இடமாகஅமைந்து விட்டது. அதனால் வந்தவர்கள் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் அவர்தெருவில் நின்று கொண்டு பேசியிருந்தால் வந்தவர்கள் கனகச்சிதமாக தலையைக்கையோடு கொண்டு சென்றிருப்பார்கள். அல்லாஹ்வின் அற்புதக் காவல், தலைக்குவந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல், கழுத்துக்கு வந்தது கையோடுபோனது.

கையில் இரத்தம் பீறிட்டவாறு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பி.ஜே. அனுமதிக்கப்படுகின்றார். மரத்துப் போவதற்காக ஊசிகள் ஒன்றுக்கு இரண்டுபோட்டும் காயத்தின் ஆழம் காரணமாக வேதனையில் அவர் விடிய விடியத்தூங்கவில்லை.

இந்தக் கொலை முயற்சி பற்றி காவல்துறையில் நான் புகார் தெரிவித்தேன். முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆள்தான் பிடிபடவில்லை. நான்சாட்சிசொல்லி விடக் கூடாது என்பதற்காக எனக்கு ஒரு மொட்டைக் கடிதமும்வந்தது.அதில், "உலகத்தில் நீ எந்தப் பகுதியில்இருந்தாலும் உன்னை வெட்டாமல் விடமாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே பி.ஜே.யும் சிகிச்சைமுடிந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால்குற்றவாளிகள் பிடிபடவில்லை. பரேலவிகளின் செல்வாக்கு! பலமான பின்னணி!

காவல்துறை கணக்குத் தீர்க்காத விவகாரத்திற்கு காவல் நாயகன் அல்லாஹ் கணக்குத்தீர்த்தான்.

இந்தக் கொலை வெறித் தாக்குதலின்இயக்குனராகச் செயல் பட்டவர் அடுத்த ஆண்டுஅதே ஜூலை 7ம் தேதி அவரது எதிர் கோஷ்டியினரால் கொல்லப்பட்டார்.

இதை இங்கே குறிப்பிடக் காரணம், பரேலவிஸத்தின் வேகத்தையும் வீரியத்தையும்அதன் விஷத் தன்மையையும் விவரிப்பதற்காகத் தான்.

அந்தப் பரேலவிஸம், அதன் ஆதரவாளர்கள் மேலப்பாளையத்தில் பி.ஜே.வைக் கொன்றுதீர்த்து விட வேண்டும் என்று கொடுவாளைத் தூக்கி வீசும் போது தான் கீரனூரியார்தமுக்கம் மைதானத்தில்,

வெட்டப்பட்டாயா? கொல்லப் பட்டாயா?… என்ற வசனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் கேட்டது போல் கப்ரு அனாச்சாரங்களை எதிர்த்து வெறும் சத்தம் மட்டும்போடாமல் இரத்தமும் சிந்திக் கொண்டிருந்தார்.

இதுபோன்று இந்த ஏகத்துவத்தில் இணைந்த எத்தனையோ சகோதரர்கள் இரத்தம் சிந்திக்கொண்டும், பொருள் இழப்பைச் சந்தித்துக் கொண்டும், இருக்கின்றனர். இந்தப் பரேலவிஸஎதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்கள், ஊர் நீக்கம்செய்யப்பட்டவர்கள், காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளானவர்கள் என்று பட்டியல்நீண்டு கொண்டே செல்கிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் கூட இதுவரை, இன்று வரை எத்தனையோ ஊர்களில்ஏகத்துவ சகோதரர்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம்பின்னணியில் இருப்பவர்கள் கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்கள் தான்.

மேலப்பாளையத்தில் பி.ஜே. வெட்டப்பட்ட பிறகு தான் நமது ஜமாஅத்திற்கென்று தனிப்பள்ளிவாசல் மஸ்ஜிதுர்ரஹ்மான் என்ற பெயரில் கண்டோம். இன்று அந்த தவ்ஹீதுஜமாஅத்தினர் பெருநாள் தொழுகை நடத்தும்போது சாதாரணமாக 10,000 பேர் கலந்துகொள்கின்றார்கள். 2,000 பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிகமான ஆண்களும் பெண்களும் பங்கெடுக்கும்பெருநாள் தொழுகை இது தான் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு மக்கள்கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுபோல் நமது பிரச்சாரக்கூட்டங்களிலும் மக்கள்வெள்ளம் நிரம்பி வழிகின்றது.

அன்று திடலில் நின்று பேசிய கீரனூரி போன்றோர் இன்று பள்ளிவாசல் வளாகத்திற்குள்மட்டும் பேசிவிட்டுச் செல்லும் நிலை! ஆனால்இன்னும், இன்றும் இந்த ஊரில்பரேலவிஸத்தை எதிர்த்துப் பேசவில்லை. இவ்வாறு நாம் குறிப்பிட்டுக் கூறுவதற்குக்காரணம், இங்கு அவரைவைத்துக் கூட்டம் நடத்துபவர்கள் பக்கா பரேலவிகள், முரீதுஏஜெண்டுகள்.

பரேலவிஸத்தை எதிர்த்து நடக்கும்இந்த யுத்தத்தில் இப்போதாவது இவர்கள் மூச்சு விடஆரம்பித்துள்ளார்களே! அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit