ஏகத்துவம் மார்ச் 2006

இறையச்சம்

எம்.எஸ். சுலைமான்

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால்இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றால்இறை பக்தி – இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத்தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளைஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான்யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பா-யல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங்கொடுமைகள், கொலை, கொள்ளை,கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனிதஉரிமை மீறல்கள் இது போன்ற ஆயிரக்கணக்கான குற்றங்களைத் தடுக்கலட்சக்கணக்கானசட்டங்கள் இருந்தும் மனிதனைத் திருத்த முடியவில்லை. அதுஇயலாது. சட்டங்களைப் போட்டு கால்நடைகளைத் தடுக்கலாம். ஆனால் பலதிட்டங்களைப் போட்டு மனிதத் தீமைகளைத் தடுக்க இயலாது என்பது நாம் பார்த்துவிடுகின்ற உண்மை.

அப்படியெனில் உலகில் ம-ந்து கிடக்கின்ற குற்றங்களைக் களைய, தடுக்க முடியவேமுடியாதா? இத்தீமைகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா?இதற்குப் பரிகாரம் தான் என்ன? இஸ்லாத்தை நோக்கிப் பார்ப்போம்.

இஸ்லாம் கூறுகின்றது. இது என்ன? இதை விடப் பன்மடங்கு தீமைகள் இருந்தாலும்அதையும் தடுக்க முடியும். மனித சட்டங்களால் அல்ல! இறையச்சத்தால் மட்டுமே!

இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பலகொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூதுஇவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத்தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும்மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், "இது ஸதகா – தர்மப் பொருளாக இல்லாம-ருந்தால் இதைநான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில்கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன்நம்மைத் தண்டித்து விடுவானோ? என்றுஅஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.

பொதுச் சொத்துக்களை எப்படியாவதுஅபகரித்து விட வேண்டும் என்று இன்று பலதலைவர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம்செலுத்தினார்கள்.

"நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள்அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகைமுடிந்தவுடன் மிக வேகமாக மனைவியரின் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின்விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிகவிரைவாகச் சென்றதன்காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். "என்னிடத்தில் (பொதுமக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம்இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான்நான் சென்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா (ரலி)

நூல்: புகாரி

இப்படிப்பட்ட தூயவரிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில்இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னா-ருந்து "அபூ மஸ்வூதே!” என்ற சப்தம் வந்தது. இருப்பினும்என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கிவிடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள். அப்பொழுதுநபியவர்கள், "அபூ மஸ்வூதே! தெரிந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெரிந்துகொள்ளுங்கள்!” என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், "இந்த அடிமையை அடிப்பதற்கு எந்தஅளவுக்கு உம்மால்முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்” என்றுகூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம்

மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்தநபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை,விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை – அவர்களும் மனிதர்கள் தாம்;அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்தஇறையச்சம் தான்.

எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்சகாலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம்இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களைபுனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம்சொல்லும்போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அதுஇல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன்நிராகரித்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வைஅடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்

அல்குர்ஆன் 22:37

"இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள்உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம்தான் என்பது புரியும்.

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்-ம்களுக்கு மத்தியில், மிகப் பெரிய தாடி இருக்கவேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்கவழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான்இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம்இல்லை என்ற நிலை உள்ளது.

இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை.மனைவிமக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பதுஇஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்குவந்து நபி (ஸல்)அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார்நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவரித்தார்கள். அப்பொழுது, "முன் பின் பாவங்கள்மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால்நாமெல்லாம் எங்கே!” என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், "நான்இனி இரவு முழுவதும் தொழுதுகொண்டிருப்பேன்” என்றார். மற்றவர், "நான்காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்” என்றார். மூன்றாமவர், "நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்”என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். "இப்படி இப்படியெல்லாம்சொன்னவர்கள் நீங்கள் தாமா?” என்று வினவினார்கள். "உங்களை விட அல்லாஹ்வைஅதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்புவைக்கிறேன். நோன்பு வைக்காமலும்இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என்இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி

நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும்எடுத்துவிடவில்லை. ஏதோ தீமையைசெய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால்அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம்என்பதன்அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மைசெய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவிமக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டுஇறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் செய்வதுதான் இறையச்சம் என்பதை இந்தச் செய்திதெளிவாகத் தெரிவிக்கின்றது.

ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும்உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல்கழிக்கின்றோம். எல்லாம்எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப்பக்குவப்படுத்துகின்றது.

நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில்இருக்கும் போதுஅதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன்நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல்இருக்கின்றான். ஏன் தெரியுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவுஉட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்தஇறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்றஇறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.

தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல்பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன்நம்மைத் தண்டிப்பான்என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையேஇறையச்சத்தின் காரணமாகசாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?

அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன்நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால்அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின்ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாகஅமைந்துள்ளன.

சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டியஅவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழமுடியாது. மிருகக்குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!

எனவே தீய செயல்களைக் களைந்து, நல்லறங்கள் புரிவதற்குத் தேவையானஇறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit