இறைவனது கைப்பிடியின் அளவு என்ன?

இறைவனது கைப்பிடியின் அளவு என்ன?

தமை அல்லாஹ்  தன்  ஒரு  பிடி  கை  மண்ணால்  படைத்தான்  என்றால்  ஆதம் அறுபது   முழம்  என்று ஹதீஸ் சொல்கிறது.  அகலம்  சுமார்  அஞ்சு  முழம்  என்று உங்கள்  கருத்து.  இந்த  அளவை  வைத்துப் பார்த்தால் அல்லாஹ்வின்  கை கொள்ளளவு  கண்  முன்னால்  வருகிறது.  அல்லாஹ்  பெரியவன்  என்றால் அவன்  ஒரு கை அளவு  பெரியதாகத்  தான்  இருக்க  வேண்டும் . எந்த  அளவு  என்றால் வானத்தையே  தன் ஒரு  கையில்  சுருட்டி விடுவான்  அல்லாஹ் என்று குர்ஆன் கூறுவதற்கு இது  முரணாக  இருக்கிறது.  ஆதம் வானம்  அளவு  பெரிய  மனிதராக இருந்திருக்க வேண்டும் அல்லவா?

ராஜா முஹம்மது குவைத்

பதில்:

இறைவனைப் பற்றிக் கூறப்படும் ஆதாரங்களை நாம் ஆய்வு செய்யும் போது இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.

அதாவது இறைவன் தான் விரும்பக்கூடிய அளவுக்கு தன்னை பிரும்மாண்டமாகவோ, சாதாரணமாகவோ மாற்றிக் கொள்வதை விரும்புகிறான். இறைவனை மறுமை நாளில் நாம் பார்க்கவிருக்கிறோம் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

நாம் பார்க்க முடியும் என்றால் நம்முடைய கண்களுக்குள் அடங்கும் அளவுக்கு இருந்தால் தான் அவனைப் பார்க்க முடியும். வானம் பூமி மற்றும் அனைத்து படைப்புகளையும் உள்ளடக்கும் அளவுக்கு பிரும்மாண்டமாக இருந்தால் அவனை அவனது முகத்தை நாம் பார்க்க முடியாது. மனிதர்கள் பார்க்கும் அளவுக்கும் அவன் தன் வடிவத்தை அமைத்துக் கொள்கிறான் என்று இதில் இருந்து அறியலாம்.

வானத்தை ஒரு கைப்பிடிக்குள் அடக்குவான் என்று கூறும் போது அவனது வடிவம் எவ்வளவு பிரும்மாண்டமானது என்பது தெரிகிறது. ஆதமை ஒரு கைப்பிடி மண்ணில் படைக்கும் போது அதற்கேற்ற வடிவத்தில் அவன் கைப்பிடி அமையும். அகில உலகையும் அவன் கைப்பிடிக்குள் அடக்கும் போது அதற்கேற்ப பிரம்மாண்டமாக அமையும். இப்படி புரிந்து கொண்டால் குழப்பமோ முரண்பாடோ வராது.

இது குறித்து மேலும் அறிய இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தைப் பார்க்கவும்.

Leave a Reply