ஊதி அணைக்க முடியாத ஜோதி

ஏகத்துவம் அக்டோபர் 2006

ஊதி அணைக்க முடியாத ஜோதி

கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப் படும் போப்16ஆம் பெனடிக்ட் (டர்ல்ங் இங்ய்ங்க்ண்ஸ்ரீற் லயஒ) தனதுசொந்த நாடான ஜெர்மனிக்குச்சென்றிருந்த போது பவேரியா நகரிலுள்ளரீஜன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில்உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டமார்க்கம்” என்ற விஷக் கருத்தை அவிழ்த்து விட்டார். அதற்கு ஆதாரமாக 14ஆம்நூற்றாண்டில் வாழ்ந்தபைசாந்திய மன்னர் இரண்டாம் மேனுவல் பலாயலோகஸ்(இஹ்க்ஷ்ஹய்ற்ண்ய்ங் ஊம்ல்ங்ழ்ர்ழ் ஙஹய்ன்ஹப் ஒஒ டஹப்ங்ர்ப்ர்ஞ்ன்ள்) என்பவர்இவ்வாறு கூறியதாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.

இஸ்லாத்தை நோக்கி போப் வீசியிருக்கும் இந்த விஷக் கணை ஒன்றும் புதிதல்ல!இஸ்லாத்தின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத கிறித்தவ உலகம் காலம் காலமாகக்கூறி வரும் குற்றச்சாட்டு தான். இதை அவர் காட்டியுள்ள மேற்கோளில் இருந்தே அறிந்துகொள்ளலாம். கிறித்தவம், யூதம் மற்றும் இந்து மதம் ஆகியவை பொதுவாகஇஸ்லாத்தை அழிப்பதற்காக இந்த வாதத்தை அடிக்கடி எடுத்து வைக்கின்றன. ஆனாலும்இந்தப் பொய்வாதத்தால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திடமுடியவில்லை. இஸ்லாம் அத்தனை தடைகளையும் தாண்டி வேகமாக விரிந்து பரந்துவளர்ந்து கொண்டிருக்கின்றது. இதை செப்டம்பர் 26ஆம் தேதி ஹிந்து பத்திரிகை, "பன்மதக் கலந்துரையாடலுக்கு போப் அழைக்கிறார்” என்ற தலைப்பிட்டு, மதங்களின்வளர்ச்சி பற்றியஒரு வரைபடத்தை வெளியிட்டிருக்கின்றது. அந்த வரைபடம் இது தான்.

இதில் 1900 முதல் 2000 வரையிலானஆண்டுகளில் இஸ்லாம் மற்றும் கிறித்தவர்களின்வளர்ச்சியை ஒப்பு நோக்கியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின்எண்ணிக்கை 6 மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகின்றது. இதிலிருந்து இஸ்லாத்தின்வளர்ச்சியை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இதைத் தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல்விட மாட்டான்.

(அல்குர்ஆன் 9:32)

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.

(அல்குர்ஆன் 61:8)

இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை

செப்டம்பர் 11ல் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பிறகு, இஸ்லாம்ஒரு வன்முறைமார்க்கம் என்ற கருத்து பரப்பப்பட்ட பிறகும் இஸ்லாம் இன்று மக்கள் மத்தியில் மிகவேகமாகப் பரவி வருகின்றது. இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான,அறிவுப் பூர்வமான, அற்புதமான கொள்கை மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் தான்இஸ்லாத்தின் வளர்ச்சியே தவிர இந்த மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று தெளிவாகவே திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகிவிட்டது.தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமானகயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:256)

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற குற்றச்சாட்டுக்குஇவ்வசனம் தெளிவாகவிடையளிக்கின்றது.

"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே)கூறுவீராக!விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தைநாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும்.அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர்வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன் 18:29)

"இந்த உண்மை இறைவனிடமிருந்து வந்ததாகும். விரும்பியவர் இதை நம்பட்டும். விரும்பியர் இதை நம்பாதிருக்கலாம். நம்பாதவர்கள் மறுமையில் இறைவன் முன்னேகுற்றவாளியாவார்கள்” என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இந்தப் பிரகடனம் இஸ்லாம் பலவீனமாக இருந்த காலத்தில் செய்யப்பட்டதன்று! இஸ்லாத்தின் கை ஓங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தலைமையில் ஆட்சிஉருவான பின் செய்யப்பட்ட பிரகடனம்.

இது போன்ற பிரகடனம் கீழ்க்காணும் வசனங்கள் மூலமும் செய்யப்படுகின்றது.

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் "என் முகத்தைஅல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறேசெய்துவிட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப் பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?” என்றுகேட்பீராக! அவர்கள்இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதேஉமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 3:20)

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின்வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர்அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாகஇருப்பதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் 9:6)

இவை வெறும் வெற்றுப் பிரகடனமாக இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் ஆட்சியில் முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டன.

அவர்களின் ஆட்சியின் கீழ் யூதர்களும், கிறித்தவர்களும் சகல உரிமைகளும் பெற்றுவாழ்ந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் யூதர் ஒருவரிடம் தமது கவசஆடையை அடைமானம் வைத்து அதை மீட்காமலேயே மரணித்து விட்டார்கள்.

(புகாரி)

நாட்டின் ஆட்சித் தலைவர் அடைமானம் வைக்கக் கூடியவராகவும் சிறுபான்மைமதத்தவர் அடகு பிடிப்பவராகவும் இருந்திருக்கின்றனர் என்பதிலிருந்து சிறுபான்மைமதத்தினர் பெற்று வந்த சுதந்திரத்தை அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைபொறித்துக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். உடனே அவள்பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். "நாங்கள் அவளைக் கொன்று விடவா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. "வேண்டாம்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அந்தவிஷத்தின் பாதிப்பை அவர்களது உள் வாயின் மேற்பகுதியில் நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2617

பொதுவாகக் குற்றவியல் சட்டங்களைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாட்சண்யமின்றிநடைமுறைப்படுத்துவார்கள். எந்தக் குற்றவாளியையும் நபிகள் நாயகத்தின் அரசுமன்னித்ததில்லை. அதே சமயத்தில் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர் மன்னித்தால்மட்டும் அரசும் அவரை மன்னிக்கும். இதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிமுறையாக இருந்தது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். எனவேஅவர்கள் தமக்குச் செய்யப்பட்ட அநீதியை மன்னித்து விட்டதால் அப்பெண் தண்டிக்காதுவிடப்பட்டாள்.

ஆட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்யும் அளவுக்கு சிறுபான்மைசமூகத்தில் சிலர் இருந்த நிலையிலும் சிறுபான்மை மக்களுக்கு நபிகள் நாயகம்ஆட்சியில்எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள்அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்)அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்றகருப்பு நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி)அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால்இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து "நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக்கொன்றவர் நீ தானா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.

வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால்அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், "தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில்காட்டாமல் இருக்க முடியுமா?” என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்புவஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின்அதீ

நூல்: புகாரி 4072

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில்கொடூரமாகக் கொன்று அவர்களுடைய ஈரலைக் கடித்துத் துப்பிய கொடூரச் செயல்செய்தவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும்மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில்மன்னித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒருமரத்தடியில்தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாகச் சென்றுஒரு மரத்திற்கு அடியில்இளைப்பாறினார்கள்.

திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன்கையில்வாளை எடுத்துக் கொண்டு, "முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?”என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் காப்பாற்றுவான்” என்றுகூறினார்கள்.

பின்பு அவர் கையில் இருந்த வாள்கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளைஎடுத்துக் கொண்டு, "இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரியஇறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், "இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல்உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார்.நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அந்த மனிதர்தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, "மக்களிலேயே மிகவும் சிறந்தஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: அஹமத் 14401

கொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டதுஅவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனிதநேயத்தையும் காட்டுகிறது.

அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர் களையும் வரவழைத்து,அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை.இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும்அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம்வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாகஅமைந்துள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில்ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள்.அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால்என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள்.பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக்கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அவரிடம் வந்து, "நீ என்ன கருதுகின்றாய்? சுமாமாவே!” என்றுகேட்டார்கள். அதற்குஅவர், "நான் நல்லதையே கருதுகின்றேன். முஹம்மதே! நீங்கள்என்னைக் கொன்றால் இரத்தப் பழி வாங்க வேண்டியஒருவனையே கொன்றீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கேஉபகாரம் செய்கின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள்விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே அவர் விடப்பட்டார். மறுநாள்வந்த போது, அவரிடம், "சுமாமாவே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள்கேட்டார்கள். அவர், "நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகின்றேன்”என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சுமாமாவை அவிழ்த்து விடுங்கள்” என்றுகூறினார்கள்.

உடனே சுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்றுகுளித்து விட்டுப்பள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை என்று நான் உறுதி கூறுகின்றேன். மேலும்,முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்றுமொழிந்தார்.

பிறகு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தை விட என்னிடம்வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் (இன்று)உங்களுடைய முகம் எல்லா முகங்களை விடவும் பிரியமானதாக ஆகி விட்டது.அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம்வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும்பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போதுஉங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர்என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்” என்று கூறிவிட்டு, "நான் இப்போது(மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் என்னகருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ராச் செய்யஅனுமதி அளித்தார்கள்.அவர் மக்காவிற்குச் சென்ற போது, ஒருவர் அவரிடம், "நீ மதம்மாறி விட்டாயா?” என்றுகேட்டார். அதற்கு சுமாமா (ரலி), "அல்லாஹ்வின்மீதாணையாக! இல்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன்இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின்மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான)யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது”என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4372

சுமாமா என்பவர் போர்க் கைதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்கொண்டுவரப்படுகின்றார். தனியாளாக வந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மாட்டிக்கொள்கின்றார். இந்த நேரத்தில் நபிகள் நாயகம் நினைத்திருந்தால், அவரைஇஸ்லாத்தில் இணையுமாறு கட்டாயப் படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி எதையும்செய்யவில்லை. அவரை மன்னித்து விடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்இந்த மன்னிக்கும் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்ட அந்தமனிதர் இஸ்லாத்தைத்தழுவுகின்றார். அதுவரை உலகத்திலேயே அதிக வெறுப்புக்கு உரியவராக நபி (ஸல்)அவர்களைத் தான் சுமாமா கருதியிருந்தார். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,உலகத்திலேயே மிகவும் விருப்பத்திற்கு உரியவராக மாறி விட்டார்கள் என்றசெய்தியையும் சுமாமா அவர்களே தெரிவிக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் கொள்கைகளையும், முஸ்லிம்களின் நடத்தையையும் பார்த்து,இஸ்லாத்திற்கு வந்தவர்கள் தான் அதிகமே தவிர, நிர்ப்பந்தத்தால் யாரும் இஸ்லாத்தைஏற்கவில்லை.

எந்த நல்லறமாயினும் உளப் பூர்வமாகச் செய்யப்பட்டால் மட்டுமே அதற்கான பயனைஅடைய முடியும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர், தான் செய்யும் நல்லறங்களை வேறுநோக்கங்களுக்காகச் செய்தால், பிறர் மெச்ச வேண்டும்என்பதற்காகச் செய்தால் அதற்குஇறைவனிடம் எந்த நன்மையும் கிடைக்காது என்று நபிகள் நாயகத்தின் ஏராளமானபொன் மொழிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்க கட்டாயப்படுத்தி ஒருவரை மார்க்கத்தில் சேர்ப்பதை எவ்வாறு இறைவன்ஏற்றுக் கொள்வான்? அவனது இஸ்லாம் இறைவனிடத்தில் எவ்வாறு அங்கீகரிக்கப்படும்என்பதைச் சிந்திப்பவர்கள் கட்டாய மத மாற்றத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அபார வளர்ச்சியால் கலகலத்துப் போன மேலைநாட்டுக்கிறித்தவர்கள், இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதுஎன்ற அவதூறுப்பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

நாட்டின் விடுதலைக்காக நடந்த போரில் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயங்களைப்பிரித்தாள்வதற்காக இதே குற்றச்சாட்டைச் சுமத்திய வர்களும் இவர்களே!

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தின்கடமைகளை நிறைவேற்றாதவர்கள். இஸ்லாமிய நெறியில் வாழாதவர்கள். தங்கள்பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்து மதக் கலாச்சாரத்திற்கேற்ப தங்களைமாற்றிக் கொண்டனர். தாங்களே முஸ்லிம்களாக வாழாதவர்கள் பிறரை எவ்வாறுமுஸ்லிம்களாக மதம் மாற்றியிருப்பார்கள்?

ஆனாலும் வெள்ளையர்கள் தூவிய இந்த நச்சுக் கருத்துத் தான் சங் பரிவாரங்கள்தங்களுக்கு ஆள் பிடிக்கப் பயன்படுத்தும் ஒரே வலையாகஅமைந்துள்ளது.

மேற்கத்திய கிறித்தவர்களும், இங்குள்ள சங்பரிவார்களும் செய்து வரும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்திற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பதை மேலேநாம்எடுத்துக் காட்டிய சம்பவங்களில் இருந்தும், இன்னும் இது போன்ற ஏராளமானசெய்திகளிலிருந்தும்அறிந்து கொள்ளலாம்.

என்ன தான் இவர்கள் தங்கள் அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாத்தின்வளர்ச்சியைத் தடுத்து விட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த இஸ்லாமிய ஜோதியாராலும் அணைத்து விட முடியாத அணையா விளக்குஎன்பதை போப் தலைமைதாங்கும் கிறித்தவ உலகத்திற்கும் மற்ற சிந்தனை உலகத்திற்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit