கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா?

கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா?

மாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு உபரியான தொழுகைகளில் தான் செய்துள்ளார்கள். கடமையான தொழுகைகளில் இது போன்று செய்துள்ளார்களா?

பதில் :

இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

صحيح مسلم

فَأَشْرَعَ نَاقَتَهُ فَشَرِبَتْ شَنَقَ لَهَا فَشَجَتْ فَبَالَتْ ثُمَّ عَدَلَ بِهَا فَأَنَاخَهَا ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى الْحَوْضِ فَتَوَضَّأَ مِنْهُ ثُمَّ قُمْتُ فَتَوَضَّأْتُ مِنْ مُتَوَضَّإِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَذَهَبَ جَبَّارُ بْنُ صَخْرٍ يَقْضِى حَاجَتَهُ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِيُصَلِّىَ وَكَانَتْ عَلَىَّ بُرْدَةٌ ذَهَبْتُ أَنْ أُخَالِفَ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِى وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَخَذَ بِيَدِى فَأَدَارَنِى حَتَّى أَقَامَنِى عَنْ يَمِينِهِ ثُمَّ جَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَتَوَضَّأَ ثُمَّ جَاءَ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدَيْنَا جَمِيعًا فَدَفَعَنَا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَرْمُقُنِى وَأَنَا لاَ أَشْعُرُ ثُمَّ فَطِنْتُ بِهِ فَقَالَ هَكَذَا بِيَدِهِ يَعْنِى شُدَّ وَسَطَكَ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَا جَابِرُ ». قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ « إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حِقْوِكَ ». سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَكَانَ قُوتُ كُلِّ رَجُلٍ مِنَّا فِى كُلِّ يَوْمٍ تَمْرَةً فَكَانَ يَمَصُّهَا ثُمَّ يَصُرُّهَا فِى ثَوْبِهِ وَكُنَّا نَخْتَبِطُ بِقِسِيِّنَا وَنَأْكُلُ حَتَّى قَرِحَتْ أَشْدَاقُنَا فَأُقْسِمُ أُخْطِئَهَا رَجُلٌ مِنَّا يَوْمًا فَانْطَلَقْنَا بِهِ نَنْعَشُهُ فَشَهِدْنَا أَنَّهُ لَمْ يُعْطَهَا فَأُعْطِيَهَا فَقَامَ فَأَخَذَهَا.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் ஒரு போருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை அவர்களுக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு செய்தது உபரியான தொழுகையில் என்றாலும் கடமையான தொழுகைக்கும் இதே சட்டம் தான். இவ்விஷயத்தில் கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் வேறுபாடு இல்லை.

நபியவர்கள் உபரியான தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றும் போது இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடித்துள்ளார்கள். தொழுகையில் பலர் ஒன்று சேரும் போது நபியவர்கள் இதைச் செய்துள்ளதால் இது ஜமாஅத் தொழுகைக்குரிய பொதுவான ஒழுங்கு முறை என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ரக்அத்களின் எண்ணிக்கை தொழுகையின் நேரம் ஆகிய விஷயங்களில் தான் கடமையான தொழுகை உபரியான தொழுகையை விட்டும் வேறுபடுகின்றது. தொழும் முறையைப் பொறுத்தவரை மார்க்கத்தில் இரண்டுக்கும் ஒரே சட்டம் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான தொழுகையில் நெஞ்சில் கை கட்டினார்கள். அத்தஹிய்யாத்தில் விரலசைத்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. உபரியான தொழுகைக்கும் இதே முறை தான்.

Leave a Reply