கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு மன்னிப்பு கேட்கலாமா?

கடைசி நேரத்தில் திருந்தியவருக்கு  மன்னிப்பு  கேட்கலாமா?

ணைவைப்பு,  வட்டி  போன்ற  பெரும்பாவங்களைச்  செய்து  கொண்டிருந்த  என்  தந்தை இவற்றை விட்டுவிடுவதாகக் கூறினார்.  இதன்  பின்  அவருக்கு  மரணம்  ஏற்பட்டது. இவருக்காகப்  பாவமன்னிப்புக் கேட்கலாமா? 

ஆயிஷா

பதில்

ஒருவர்  தான்  செய்தது  பாவம்  என்பதை  உணர்ந்து  அதிலிருந்து  விலகிவிட்டால் அப்பாவத்தை அவர் செய்யாதவரைப் போன்று ஆகிவிடுகிறார். இவர் திருந்தி விட்டதால் இதற்கு  முன்  இவர்  செய்த  பாவங்களை  இறைவன்  தள்ளுபடி செய்துவிடுகிறான்.

4240 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ  رواه إبن ماجه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பாவத்திலிருந்து மன்னிப்புக் கோரியவர் பாவமே செய்யாதவனைப் போன்றவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : இப்னு மாஜா 4240

உங்கள் தந்தை மரணிப்பதற்கு முன்பு தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபட மாட்டேன்  என  வெளிப்படையாகக்  கூறியுள்ளார்.  இதன்  பிறகு  அவர்  கூறியது போல்  எந்த  இணைவைப்புக்  காரியங்களிலும் ஈடுபடாமல்  அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் அவருக்காக பாவமன்னிப்புத் தேடலாம். தேடவேண்டும்.

Leave a Reply