கினி பன்றிகள் வளர்க்கலாமா?

கினி பன்றிகள் வளர்க்கலாமா?

கேள்வி

கினி பன்றிகள் தோற்றத்தில் முயல் போன்றும், எலி போன்றும் உள்ளது. இந்தப் பிராணியை செல்லப் பிராணியாக வளர்ப்பது கூடுமா?

பதில்:

இந்தப் பிராணி பன்றியைப் போன்று பெரிய தலை தடித்த கழுத்து வட்டமான பின்பகுதி ஆகியவற்றைப் பெற்றுள்ளதால் இதில் பன்றியின் சாயல் தென்படும். மேலும் இது எழுப்பும் சப்தம் பன்றியின் சப்தத்தைப் போன்று அமைந்துள்ளது. முயலுடைய சாயலும் இந்தப் பிராணியில் தெரியும்.

ஆனால் உண்மையில் இது பன்றி இனத்தைச் சார்ந்த பிராணி அல்ல. இதனுடைய வாய் பன்றியின் வாயைப் போன்று இருக்காது. இது எலி குடும்பத்தைச் சார்ந்ததாகும். எலியைப் போன்று இது கொரித்து உண்பதால் இது எலிக் குடும்பத்தின் ஒரு வகையாகும். இவை கினி எலிகள் என்றும் சொல்லப்படும்.

பன்றியின் சாயல் ஒரு கடல் வாழ் உயிரினத்திடம் இருந்தால் அதைக் கடல் பன்றி என்று கூறுகின்றனர். குதிரை போன்ற சாயல் இருந்தால் அதைக் கடல் குதிரை என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இவை குதிரையோ பன்றியோ அல்ல. இந்த அடிப்படையில் தான் கினி எலிகளை கினி பன்றிகள் என்று கூறுகின்றனர். இவை உண்மையில் பன்றிகள் அல்ல.

இந்தப் பிராணி பல வண்ணங்களில் இருப்பதால் இதைச் செல்லப் பிராணியாக வீடுகளில் வளர்க்கின்றனர். பன்றியை விற்பதும், வளர்ப்பதும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. கினி எலிகள் பன்றி இல்லை என்பதால் இதை வளர்ப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

இதையும் பார்க்கவும்

19.09.2012. 8:18 AM

Leave a Reply