கொடிய வரதட்சணையின் கோர முகம்

கொடிய வரதட்சணையின் கோர முகம்

எம். ஷம்சுல்லுஹா

ஏகத்துவம் 2005 ஜூலை

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களை பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக்கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் படுக்க வைக்காமல் இருப்பதேஅவர்கள் உங்களுக்கு செய்யும் கடமையாகும். அதை அவர்கள் செய்தால் காயமின்றி அவர்களை அடியுங்கள். உணவும் உடையும் வழங்குவதே நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செய்யவேண்டிய கடமையாகும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி உரையாகும்.

ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்

ஒரு பெண்ணை ஒருவன் மணம் முடிக்கின்றான் என்றால் அந்தப் பெண்ணைஅல்லாஹ் அவரிடம் அடைக்கலமாகத் தந்திருக்கின்றான். அல்லாஹ்வின்கட்டளைப் படியே அவர் அப்பெண்ணை திருமணம் முடிக்கின்றார். திருமணம் முடித்து விட்டால் அப்பெண்மணி சாகும் காலம் வரை அவருக்கு சாசுவதமாக சாசனம் செய்து கொடுக்கப்பட்ட அடிமைப்பெண்! தன்மானம், சூடு, சொரணை என்று சகல உணர்வுகளையும் இழந்து விட்ட ஜடப்பொருள்! வெறும் சடலம் என்ற நிலைகள் ஒரு போதும் கிடையாது.

அவள் அல்லாஹ்வால் தரப்பட்ட அடைக்கலப் பொருள். அதில் அத்துமீறல் நடந்தால் அனைத்திலும் ஆற்றல்பெற்ற அதிகாரியான அவன் உங்களை ஒன்றும் செய்யாமல்விட்டு விடுவான் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் நமக்கு எச்சரிக்கை உணர்த்துகின்றார்கள்.

இன்று திருமணம் முடிக்கின்றவர்கள் ஒப்புக்காக மட்டும் ஒப்புக்கொண்டேன் என்று திருமணம் ஒப்பந்தத்தின் போது குறிப்பிடுகின்றார்கள். ஒப்புக் கொண்டேன் என்றால் மனைவிக்கும் அவர் மூலம் பெறுகின்ற பிள்ளைகளுக்கும் உணவுக்கும் உடைக்கும் நான் பொறுப்பு ஏற்கின்றேன் என்று வாக்குமூலம் அளிப்பதாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக மணம் முடிப்பதற்கு முன் பணமாக ஒரு தொகைஅதன் பின்நகை, அதன் பின் ரெப்ரிஜ்ரேட்டர், ஹோண்டா, கார் என்று பொருட்களாக பலவகை. இத்தனையையும் ஒரு வகையாக பெண் வீட்டிலேயே பெற்று விடுகின்றனர். இதைஅடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்றுசெலவு செய்து வைக்கும் விருந்து.

இஸ்லாம் மாப்பிள்ளை வீட்டாரை விருந்து வைக்க சொல்கின்றது. ஆனால், எங்கேனும்பெண் வீட்டாரை இஸ்லாம் விருந்து வைக்க சொல்லியிருக்கின்றதா? என்றுஅல்குர்ஆனில், அண்ணல் நபியின் அழகிய வழியில் ஆக்கப்பூர்வமான மொழியில்எவ்வளவோ தேடிப் பார்த்தாயிற்று. எள்முனையளவு கூட இதற்கான முன் மாதிரியைஅறவே காணோம். இஸ்லாம் சொல்லாத இந்த நடைமுறை, பொல்லாத சமூகநிர்ப்பந்தம் பெண் வீட்டாரின் தலையில் ஒரு பாரமாக சுமத்தப் பட்டுள்ளது.

பணக்காரர்கள் செய்யும் இந்தக் காரியத்தை ஏழைகளும் செய்யத் தலைப்பட்டதின்விளைவு பெண்ணைப் பெற்றவன் கடன் படுகிறான். கடைசியில் வீட்டை விற்றவன்என்ற நிலையில் வீதிக்கு வருகின்றான். இத்தகைய சமுதாய நிர்பந்தத்தால் சந்திசிரிக்கப் படுகின்றான். இத்துடன் இந்தக் கொடுமை நிற்கவில்லை. அறிவியல்தந்திருக்கும் அற்புதக் கருவிகளின் பயன்பாட்டால் தாயின் கருவில் உருவெடுக்கும்சிசுவையே ஒரு கொசுவைப் போன்று கொன்றொழிக் கின்றான். கருணையின் உருவானதாயின் கருவே கல்லறையாகி விடுகின்றது.

காரணம் பெண்ணைப் பெற்றவர்கள் சந்திக்கும் சமூக நிர்பந்தம் தான்.விலை உயர்ந்தஇந்த சிசுக் கொலையை செய்பவர்கள் பொருளாதாரத்தில்நிலை உயர்ந்தவர்கள்தான்என்றால்சேலத்துப் பக்கம் போனீர்கள் என்றால் பொருளாதாரத்தில் நிலைகுறைந்தவர்கள் என்ன செய்கின் றார்கள் என்ற அவலம் தெரியும். பெண்சிசுக் கொலைசெய்வதில் பழைய முறைகள் நமக்குத் தெரியும்.

ஆனால் புதிய கலைகள் என்ற தலைப்பில் இந்து நாளெடு வெளியிட்ட செய்தி, உங்களைமலைப்பில் அல்ல. மயக்கத் திலேயே ஆழ்த்தி விடும்.பெண் குழந்தைகளை இறுக்கஞ்செடி அல்லது கள்ளிப் பாலை வைத்து கொலை செய்வது பழைய முறை. இப்போது புதிய கொலை முறைகளைப் பாருங்கள்.

(1) புகையிலைச் சாற்றை குழந்தை வாயில் புகட்டி சாகடித்தல்

(2) காரம் நிறைந்த கோழி சூப்பை கொடுத்தல். இதன் விளைவால் கொஞ்ச நேரத்தில்அந்தப் பெண்குருத்து, குய்யோ முறையோ என்று கீச் குரலில் கத்தி விட்டு இறந்துகுளிர்ந்து போதல்.

(3) குழந்தைக்கு அளவுக்கு அதிகம் பால் புகட்டி விட்டு ஈவு இரக்கமின்றி ஒருஈரத்துணியால் பொதிந்து அதிலேயே உயிர் துடிப்பு நிற்கும் வரை உறையச் செய்தல்.

(4) பிறந்த அந்த இளங்கொழுந்தின்அறுக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து வழிகின்றஇரத்தத்தை நிறுத்தாது அப்படியே ஓட விட்டு உயிரிழக்கச் செய்தல்.

(5) குழந்தையை கைக் காற்றாடியின் முன்னால் படுக்க வைத்து அந்தக் காற்றாடியின் விசிறிகளை அறுந்து போகும் வேகத்தில் சுழலச் செய்தல். புயலென வீசும் இந்தச் சுழல்காற்று வீச்சில் இந்த அரும்பின் சுவாசக் காற்றை நிறுத்தி விடுதல்

என இந்த மாபாதகங்களை சேலம் பகுதியில் வசிக்கும் பெண்கள் செய்கின்றனர். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆண் குழந்தை ஒன்று,பெண் குழந்தைகள் இரண்டு. நான்காவது ஒரு பெண் என்றால் அக்குழந்தையை விட்டு வைக்க மாட்டேன் என்று இந்தப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருத்தி குறிப்பிடுகின்றாள். பெண் குழந்தை எனில் பெரும் செலவு கல்யாணம் முடிக்க காசுபணம் அதிகம் தேவை. இதுதான் பெண்குழந்தைகளை கொல்லக் காரணம் என்று அந்தப் பெண் சொல்லுகின்றாள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம்கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக்கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான்.இழிவுடன் இதைவைத்துக் கொள்வதா?அல்லது மண்ணில் இதை (உயிருடன்)புதைப்பதா? (என்றுஎண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 16 : 58, 59)

என்று அல்லாஹ் சொல்வது போல் அரபகத்தில் ஆண்கள் தான் இந்தக் கொலையைஅரக்க குணத்துடன் அரங்கேற்றினர். இங்கேயோ இரக்க குணம் கொள்ள வேண்டியபெண்களே இரும்புக் கரம் கொண்டு பெண் சிசுவைக் கொல்கின்றனர். பெற்றத் தாயே தன்பிள்ளையை கொலை செய்யும் இந்தக் கொடுமை வரதட்சணை தந்த உக்கிரவிளைவாகும்.

எங்கோ நடக்கும் இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்போமேயானால்நாம் ஞானசூன்யம் கொண்டவர் களாவோம். எங்கெங்கு இந்தச் சிசுக் கொலை,வரதட்சணைக் கொலை நடக்கின்றதோ அங்கெங்கெல்லாம்நமக்கு அந்தப் பாவத்தில்இறைவனிடத்தில் எழுதப்பட்டே தீர்கின்றது.

என்ன பாவத்துக்காக கொல்லப் பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்டவள் விசாரிக்கப்படும் போது,

(அல்குர்ஆன் 81 : 8,9)

என மறுமை நாளின் விசாரணையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அந்நாளில் கொல்லப்பட்ட அந்தச் சிசுக்களெல்லாம் சொல்லப் போகும் காரணம் வரதட்சணை தான். எனவே யாரெல்லாம் இந்த வரதட்சணை வாங்குவதில்ஈடுபடுகின்றார்களோ அவர்களெல்லாம் இந்தப் பெண் சிசுக் கொலைக்குக் காரணம்.

அவர்கள் இந்தப் பாவத்திற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் தப்பஇயலாது. எவர் வரதட்சணை வாங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றாரோ, அவர் இந்தப்பாவத்திலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றார்.

வரதட்சணை வாங்குவோர் மட்டுமல்ல,அந்த வரதட்சணைத் திருமணங்களில்போய் கலந்து கொள்வோர், அதற்கு அனுமதி கொடுப்போர், அந்தப் பணத்தில் விருந்துண்டவர்கள் அனைவரும்இந்தப் பாவத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

எனவே நேரடியாகவும், பக்க விளைவாகவும் கொலை, கொள்ளை போன்ற பாவத்தில் நம்மை பங்கெடுக்க வைக்கும் வரதட்சணை கொடுமையிலிருந்து என்றென்றும்விலகுவோமாக!