சுன்னத்தான நோன்புகள்

ஏகத்துவம் நவம்பர் 2005

சுன்னத்தான நோன்புகள்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்புநோற்கட்டும்.

(அல்குர்ஆன் 2:183)

என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்று விட்டோம். இது அல்லாஹ்நமக்குக் கடமையாக்கிய நோன்பாகும். இவை தவிரகடமையல்லாத நோன்புகளும் உள்ளன. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வலியுறுத்திய, செயல்படுத்திய சுன்னத்தானநோன்புகள் பற்றிய விபரத்தைப் பார்ப்போம்.

ஆறு நோன்பு

ரமளான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புபிடிப்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்பது பத்து மாதங்கள் நோன்புநோற்றதற்குச் சமம். ஷவ்வாலில் ஆறுநோன்புகள் நோற்றால்அவை 60 நாட்கள் நோன்பு நோற்றதைப் போன்றாகின்றது.

எனவே ஷவ்வாலில் ஆறு நோன்பு பிடிப்பதால் ஆண்டுமுழுவதும் நோன்பு நோற்ற நன்மைகள் கிடைக்கின்றன என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

"யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்துஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர்காலமெல்லாம் நோற்றவராவார்” என அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி),

நூல்கள்: முஸ்லிம் 1984, அபூதாவூத் 2078

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத்தொடர்ந்து ஷவ்வா-ல் நோன்பு நோற்க வேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து” என்ற வார்த்தையி-ருந்துபெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது தவறானவாதமாகும்.

ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும்நோன்பு நோற்று, ஷவ்வா-லும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்றகருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறுநாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்றுகூறப்படவில்லை.

தொடர்வது என்பதற்கு "அத்பஅஹு” என்ற அரபுச் சொல்பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு "முததாபிஐன்” என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும்.

உதாரணமாக, மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர்அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிதிருக்குர்ஆனில் கூறப்படுகின்றது.

(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும்ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள்தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்திபெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 58:4)

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்என்பதற்கு "முததாபிஐன்” என்ற சொல்பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால்ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறுகூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்புபிடிக்கவேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்றுவைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத்தடை உள்ளது.

ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றகருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2-ருந்து 7 வரைதொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.

இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப்போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின்தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்குஎந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால்மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள்நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறுநோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்றகணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறுநோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதி-ருந்துஅறியலாம். ஆனால் ஷவ்வா-ல் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால்ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்துவிட வேண்டும்.

ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.

ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில்அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்புநோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர்இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவுசெய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்றுஅறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில்நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும்நோன்புநோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப்பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள்(பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம்அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த்முஅவ்வித் (ரலி),

நூல்: புகாரி 1960

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்புகட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 1592

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்புநோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போதுநபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளையூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும்நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால்அடுத்த ஆண்டுவருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089

அரபா நாள் நோன்பு

"அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம்மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும்” என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில்நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: இப்னுமாஜா 1722

வாரத்தில் இரண்டு நோன்புகள்

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத்தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்கள்: திர்மிதீ 676, நஸயீ 2321

மாதத்தில் மூன்று நோன்புகள்

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதுகாலமெல்லாம் நோன்புநோற்றதாக அமையும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்நோன்பு நோற்குமாறும், ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும்ஆகிய இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1981

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான்உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்றுவணங்குவேன்” என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி அவர்கள் என்னிடம்கேட்ட போது) "என் தாயும் தந்தையும் உங்களுக்குஅர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன்.நபி (ஸல்) அவர்கள், "இது உம்மால் முடியாது. (சிலநாட்கள்) நோன்பு வைத்து, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது விட்டு (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்குநற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இதுகாலமெல்லாம் நோன்புநோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள். "என்னால் இதைவிடசிறப்பானதைச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். "அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள்விட்டுவிடுவீராக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, "என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்யமுடியும்என்று நான் கருதுகிறேன்” என்று கூறினேன். "அப்படியானால்ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவீராக! இதுதான்தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவேசிறந்ததாகும்” என்றார்கள். "என்னால் இதைவிட சிறப்பாகச்செய்ய முடியும்” என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள்"இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல்: புகாரி 1976

மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13, 14, 15ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்கள்: திர்மிதீ 692

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit