ஜின்களிடம் வைத்தியம் பார்க்கலாமா?

ஜின்களிடம் வைத்தியம் பார்க்கலாமா?

ஷாஹுல்

ஜின்களைப் பற்றி இஸ்லாம் கூறும் அடிப்படை அறிவு இல்லாததால் இது போன்றகேள்விகள் எழுகின்றன.

ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்ணுக்குப் புலப்பட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

திருக்குர்ஆன் 7:27

ஜின்கள் நம்முடைய பார்வைக்குத் தெரியவே மாட்டார்கள் எனில் அவர்களிடம் சென்று எப்படி வைத்தியம் பார்க்க முடியும்?

அவர்கள் எங்கிருந்து கொண்டு வைத்தியம் பார்க்கிறார்கள்? இது வரை எத்தனை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்?

ஜின்கள் மனிதர்களுக்கு வைத்தியம் பார்ப்பார்கள் என்பது பொய்யாகும்..

நான் ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்கின்றேன், அதன் மூலம் எந்தக்காரியங்களையும் சாதிக்க முடியும் என்று சில ஏமாற்று பேர்வழிகள் ஒன்றுமறியாத அப்பாவிகளிடம் கூறி, ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற யாரோ ஒருவர் உங்களிடம் சொன்ன கட்டுக்கதையை நம்பி இவ்வாறு கேட்டிருக்கிறீர்கள்.

Leave a Reply