தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம்

தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம்

ஏகத்துவம் 2005 மே

பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள், அதை பதினோராயிரம் முட்டாள்கள்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதாகக் கூறுவார்கள்.இன்று பெர்னாட்ஷா உயிருடன் இருந்தால் பதினோரு முட்டாள்கள்விளையாடுகின்றார்கள். அதைப் பல கோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்றுகூறியிருப்பார். அந்த அளவுக்கு இன்று கிரிக்கெட் வெறி தலை விரித்தாடுகின்றது.

பாருங்களேன்! பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்குகிரிக்கெட்பார்ப்பதற்காக வருகின்றார் என்றால் இந்தக் கிரிக்கெட் மோகத்தை என்னவென்றுசொல்வது? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைப்பிரச்சனையிலிருந்து எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின் றன. அவற்றைப்பற்றியெல்லாம் விவாதித்து, இரு நாடுகளுக்கு மத்தியில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தபயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றிருக்கையில் இவர் கிரிக்கெட் ஆட்டம்பார்க்க கிளம்பி வருகின்றார் என்றால் இந்தக் கிரிக்கெட் வெறி எந்தஅளவுக்குஏறியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அவர் பாகிஸ்தானின் சாதாரணக் குடிமகன் அல்ல! ஒரு நாட்டின் அதிபதி! அதிலும்தன்னை இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு நாட்டின் அதிபதி!இப்படிப்பட்ட ஓர் ஆட்சியாளரை, மக்களின் கோடிக் கணக்கான வரிப் பணத்தைவாரியிறைத்து பாழாக்க வைத்தி ருக்கின்றது இந்தக் கிரிக்கெட் மோகம். ஓர்ஆட்சியாளரே இந்த வெறிக்கு இப்படிப் பலியாகியுள்ளார் என்றால் சாமானிய மக்களின்வெறித்தனத்தை இங்கு நாம் சொல்ல வேண்டியதில்லை.

எனவே இப்படிப்பட்ட வெறியை ஏற்படுத்தும் இந்தக் கிரிக்கெட் பற்றியும், அதுஏற்படுத்திய தீய விளைவுகள் பற்றியும் தெளிவாக விளக்கிச் சொல்வது நம் மீது கடமைஎன்ற அடிப்படையில் கிரிக்கெட்டின் தீய விளைவுகளை வரிசையாகப் பார்ப்போம்.

விரயமாகும் விலை மதிப்பற்ற காலம்

இன்று உலகமே இயந்திர மயமாகி விட்டதால், விவசாயம், வணிகம், தொழில் என்றுவாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் உடல் உழைப்புக்கு ஒரு துளி கூடஇடமில்லாமல் ஆகிவிட்டது.

ஒரு நாலடி எடுத்து வைத்து கடைத்தெருவுக்குச் சென்று சாமான்கள்வாங்கும் காலம்மலையேறி விட்டது. சைக்கிளும் மாறி, எல்லாவற்றுக்கும் இரு சக்கர வாகனம் தான்.ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதஉடலை, ஓடியாடி வியர்வை சிந்தும்அமைப்பிலேயே படைத்துள்ளான்.

உடற்பயிற்சிக்காக ஒரு விளையாட்டு

உடல் நலக் குறைவு என்று மருத்துவரிடம் சென்றால், சுகர் இருக்கின்றது,கொலஸ்ட்ரால் இருக் கின்றது எனவே தினமும் காலையில் நீங்கள் வாக்கிங்செல்லுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுகின்றார். அன்றாடம் மூட்டை தூக்கி,சைக்கிள் மிதித்து, நடையையே வாழ்க்கையாக்கிக் கொண்டு உடலை வருத்திஉழைப்போருக்கு நீரிழிவும்இல்லை. இரத்தக் கொதிப்பும் இல்லை என்பது நாம்அனுபவத்தில் கண்டு வரும் உண்மை!

இந்த அடிப்படையில் வீடடங்கி, மூலையில் முடங்கி, மூளையை மட்டும்கசக்கி,கணிப்பொறியில் பிணைக் கைதியானவர்களுக்கு, கண்டிப்பாக ஓர் அரை மணி நேரம்வாக்கிங் போன்ற உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.

இதை மையமாகக் கொண்டு உடற்பயிற்சி என்ற வகையில் வியர்வையைவரவழைக்கின்ற, உடல் உழைப்பைத் தருகின்ற ஏதேனும் ஒரு விளையாட்டைவிளையாடலாம். பூப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஓட்டப் பந்தயம்,டென்னிஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து 24 மணி நேரத்தில்இதற்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம். அவ்வளவு தான். அதை வாழ் நாள்முழுமைக்கும் சுகாதாரமாக வாழ்வதற்குரிய முதலீடு என்றாக்கிக் கொண்டால் அதுவும்ஒரு நன்மையாகி விடும்.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப்பொறுத்தே அமைகின்றன என்பது நபிமொழி. (புகாரி 1)

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம்விளையாடும் விளையாட்டு கூட நன்மையைப்பெற்றுத் தரும் சாதனமாக அமைந்து விடும்.

விளையாட்டே வாழ்க்கை

ஆனால் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதி விளையாட்டு என்பது போக, விளையாட்டேவாழக்கையாகி விட்டது. விளையாட வேண்டுமாயின் ஒரு மைதானத்தில் போய் ஒருமணி நேரம் விளையாடி விட்டுப் போக வேண்டியது தான். ஆனால் அதை விட்டு விட்டு,ஒரு நாள் போட்டி என்று இவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்குவதுடன் மற்றவர்கள்நேரத்தையும் வீணாக்குகின்றனர். ஆம். பகல் இரவாக இவர்கள் நின்று ஆடும்ஆட்டத்திற்கு, கோடிக் கணக்கில் இவர்களுக்குப் பணம் கிடைக்கின்றது.

ஆனால் இந்த விளையாட்டை தூங்காமல், கண் விழித்துக் கொண்டு பார்ப்பதால் என்னகிடைக்கப் போகின்றது? இந்தக் கண்ணோட்டத்தில் இந்தக் கிரிக்கெட்டின் தீமை, விலைமதிக்க முடியாத காலத்தை வீணாகவும், விரயமாகவும் ஆக்கி விடுகின்றது.விளையாடுபவர்களும், அதைப் பார்ப்பவர்களும் தங்கள் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.

அதிக நேரத்தை அபகரிக்கும் கிரிக்கெட்

உலகத்தில் உள்ள விளை யாட்டுக்களில் அதிக நேரத்தை அபகரிக்கும்ஒரு கிறுக்குவிளையாட்டு கிரிக்கெட் தான். எட்டு மணி நேரத்தைச்சாப்பிடும் தறி கெட்ட தரித்திரம்பிடித்த விளையாட்டு இது தான். இதில் டெஸ்ட் போட்டி என்றால் தொடர்ந்து 5 நாட்கள்.உலகெங்கிலும் தொழிலாளர்களின் வேலை நேரம் தான் 8 மணி நேரமாகும். அப்படிப்பட்டபொன்னான நேரம் தான் இப்படி மண்ணாக்கப்படுகின்றது.

காலம் என்பது பொன் போன்றது என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்த வரை காலம்பொன்னை விடவும் மேலானது. உயிர் போன்றது. பொன்னை இழந்துவிட்டால்சம்பாதித்து விடலாம். ஆனால் தப்பிய உயிரை எப்படி திரும்ப சம்பாதிக்க முடியாதோஅது போல் கடந்து விட்ட காலத்தையும் ஒரு போதும் திரும்பப் பெற முடியாது.

அதனால் மனிதன் காலத்தை விரயமாக்குவதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. அதில் இஸ்லாம் கண்டிப்பும் கடுமையும் காட்டுகின்றது. இதற்கு சிறந்தஉதாரணம் திருக்குர்ஆனின் 103வது அத்தியாயமாகும்.

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டுநல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக்கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 103:1,2,3)

திருக்குர்ஆன் கூறும் மேற்கண்ட நான்கு காரியங்களையும் விட்டு விட்டு வேறுவகையான காரியங்களில் ஈடுபடுபவர்கள் நஷ்டவாளிகள் என்றுஅல்லாஹ்கூறுகின்றான்.

இப்போது இந்தக் கிரிக்கெட்டில்மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்கள் இருக்கின்றதா?என்று ஓர் இறைநம்பிக்கையாளர் பார்த்தால் நிச்சயமாக இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்.

வாழ்நாளைக் கழித்த விதம், கற்ற கல்வியின் படி நடந்த விதம், பொருளைச் சம்பாதித்துஅதைச் செலவளித்த விதம், உடலை அழித்த விதம் ஆகியவை பற்றி ஓர் அடியான்மறுமை நாளில் விசாரிக்கப் படாத வரை அவனது பாதங்கள் நகராது என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்தா அல் அஸ்லமி

நூல்கள்: திர்மிதீ 2341, தாரமீ 536

இந்த ஹதீஸின் படி வாழ்நாள் என்பது காலத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். இன்றுமறுமை நாளை நம்பிய முஸ்லிம்கள் கூட, எந்தப் பயனும் இல்லாமல் கிரிக்கெட்பார்ப்பதில் தன் வாழ்நாளைச் செலவழிக்கின்றனர். இவர்கள் மறுமையில்அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? எனவே காலத்தின் அருமைபெருமை உணர்ந்து மறுமை விசாரணையைக் கருத்தில் கொண்டு ஒரு துளியளவு கூடநமது நேரத்தை வீணாக்கக்கூடாது.

மறுமையை, நரகத்தின் வேதனையை நம்பிய எந்தவொரு இறை நம்பிக்கையாளனும்இப்படி விளையாட்டைப் பார்த்து தங்கள் காலத்தை வீணடிக்க மாட்டார்கள். ஏனெனில்ஒரு மனிதன் மரண வேளையை அடையும் போது எவ்வாறுபுலம்புவான் என்பதைத்திருக்குர்ஆன் கூறுகின்றது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டுவந்ததில் (வாழ்நாளில்) நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்றுகூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான்.அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:99,100)

மரண வேளை வந்து விடும் போது தான், ஒருவன் தான் அமல் செய்யாது விட்டதைநினைத்து வேதனைப் படுவான். அவனுக்கு இறைவன் ஒரு நிமிடத் துளி கூட அவகாசம்அளிக்கப் போவதில்லை.

மரண வேளையில் மட்டுமல்ல! நரகத்தில் வெந்து கொண்டிருக்கும் போதும் மனிதன்இதையே சொல்லிப் புலம்புவான். அப்போது அல்லாஹ் அவனிடம் வாழ்நாள் பற்றியஅருட்கொடையைச் சொல்லிக் காட்டுவான்.

"எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றிநல்லறங்களைச் செய்கிறோம்” என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினைபெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம்எச்சரிக்கைசெய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 35:37

இவ்வளவு பெரிய அருட் கொடையான வாழ்நாளை இந்த வீணான விளையாட்டில்வீணடிக் கலாமா? சிந்திக்க வேண்டும். அதனால் தான் முஃமின்களின்பண்புகளைப் பற்றிசொல்லும் போதுவீணானதைப் புறக்கணிப்பார்கள் (அல்குர்ஆன் 23:3) என்று அல்லாஹ்கூறுகின்றான். எனவே நாம் வாழ்நாளை, கால நேரத்தை இந்தக் கிரிக்கெட்டில்கழிக்காதிருப்போமாக!

வணக்க வழிபாட்டைத் தடுக்கும் கிரிக்கெட்

எட்டு மணி நேரம் விளையாடும் முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களுக்குதொழுகை என்பதுகடமை கிடையாது. இவர்கள் புனிதப் போரில் (?) ஈடுபட்ட காரணத்தினால் சலுகைகொடுத்து விட்டான் போலும். முஸ்லிம் கிரிக்கெட் வீரர்கள் என்றால் நமதுசமுதாயத்திற்கு அவர்கள் மீது ஓர் அலாதியான பிரியம் ஏற்பட்டு விடுகின்றது.இவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது என்னவெனில், இந்தக் கிரிக்கெட் வீரர்கள்முஸ்லிம்கள் என்றால் ஐந்து நேரத் தொழுகைகளை தொழுதாக வேண்டும். 4:103 வசனம்அதைத் தான் வலியுறுத்துகின்றது. இதைச் செய்யத் தவறினால் அவர்கள் எப்படிமுஸ்லிமாக இருக்கமுடியும்?

அதிலும் குறிப்பாக தங்களது சொந்த ஊரில் போட்டி நடந்தாலும் இந்தமுஸ்லிம்கிரிக்கெட் வீரர்கள் ஜும்ஆ தொழுவது கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால்அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள்அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரத்தைக் கூட ஜும்ஆவிற்குக் குறுக்கே வந்துவிடக் கூடாது என்று சொல்லும் போது, இந்த விளையாட்டு எம்மாத்திரம்?

யூதர்களின் புனித நாளில் அவர்கள் பிழைப்பைத் தேடி மீன் பிடிக்கச் சென்றதால் தான்அவர்களைக் குரங்காக மாற்றியதாக அல்லாஹ் 17:163 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.அது போன்று நாமும் நமது புனித நாளை வீணாக்கி விடக் கூடாதுஎன்பதற்காகவேஅல்லாஹ் இதைச் சொல்லிக் காட்டுகின்றான். ஆனால் இந்தக் கிரிக்கெட் வீரர்கள்இதையெல்லாம் பார்ப்பது கிடையாது.

கிரிக்கெட் போட்டியா? கார்கில் போரா?

எல்லாம் வல்ல அல்லாஹ் மது, சூதைப் பற்றிக் குறிப்பிடும் போது, 2:219 வசனத்தில்,அவற்றில் பாவமேஅதிகம் உள்ளது என்று கூறுகின்றான்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும்ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத்தடுக்கவுமேஷைத்தான் விரும்பு கிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 5:91)

மது, சூது வேண்டாம் என்பதற்கு அல்லாஹ் இங்கு ஓர் அடிப்படை விஷயத்தைக்கூறுகின்றான். விரோதம்,பகைமை, அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுத்தல் என்றமூன்று அடிப்படைக் காரணங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்த மூன்று அடிப்படைக் காரணங்களும் கிரிக்கெட்டில் அப்படியே இடம் பெறுகின்றன.உடற்பயிற்சி என்ற சிறு பயனை விட இதில் பாவம் தான் அதிகம் அடங்கியிருக்கின்றதுஎன்பதை இங்கு அடுக்கடுக்காகச் சொல்லப்படும் தீய விளைவுகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பகைமையையும் விரோதத்தையும் தான்ஷைத்தான் வளர்க்கின்றான் என்றுஅல்லாஹ்கூறும் காரணம் கிரிக்கெட்டில் அதிகம் காணப் படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டு நடக்கத் துவங்கினால், அதிலும் குறிப்பாகஇந்தியா,பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி என்றால் நாடே டென்ஷனாகிவிடுகின்றது. சிவசேனா போன்ற இந்துத்துவா சக்திகள் இதை ஒரு விளையாட்டாகப்பார்ப்பதைவிட்டு விட்டு, இந்தியா பாகிஸ்தான் போராகவே பார்க்கின்றனர்.

மீண்டும் ஒரு கார்கில் போர் என்று செல்போன்களில் மெஸேஜ் அனுப்புகின்றனர்.கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தை அடித்து உடைத்து ஒரு வகுப்புக்கலவரத்துக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள். அதிலும் பாகிஸ்தான்வீரர்கள் ஆடும் போது, முஸ்லிம்கள் காட்டும் ஆர்வமும், ஆரவாரமும் பாகிஸ்தான் மீதுகொண்டிருக்கும் பக்தியாகவும், முஸ்லிம்கள் தேச விரோத சக்தியாகவும்சித்தரிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் ஜெயித்தால் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் வெடி போட்டுக்கொண்டாடுகின்றனர்.

ஏற்கனவே இந்துத்துவா சக்திகள் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகத்திற்குரியதாகசித்தரித்து விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டி ருக்கும் வேளையில், முஸ்லிம்களுக்குஇது தேவை தானா? கிரிக்கெட்டால் இப்படி ஒரு கேடு கெட்ட நிலை முஸ்லிம்களுக்குஅவசியம் தானா? என்று யோசிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, கிறுகிறுக்கும் மதுவின் போதையை விட,பொருளைச் சூறையாடும் சூதாட்டத்தின் போதையை விட இந்தக் கிரிக்கெட் போதைமிகக் கொடுமையானது. மது, சூதால் ஏற்படும் பகைமை, விரோதத்தை விடகிரிக்கெட்டால் ஏற்படும் விரோதமும், குரோதமும் பன் மடங்கு பரிமாணம் கொண்டது.முஸ்லிம்களின் உயிர்களுக்கே உலை வைக்கும் அணு உலை போன்றது. போபால் விஷவாயுவை விடக் கொடுமையானது. எனவே இதன் காரணமாகவும் கிரிக்கெட் என்பதுமுஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு விளையாட்டாகும்.

மது, சூதில் அடங்கியிருக்கும் மற்றொரு தீமையான அல்லாஹ்வின் நினைவை விட்டும்தடுத்தல் என்ற தீமை இதில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்துகிடக்கின்றது.

(இறை) இல்லங்கள் உயர்த்தப் படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும்அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சிலஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின்நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதைவிட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள்அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச்செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)

இந்த வசனங்களில் வியாபாரமோ, பொருட் செல்வமோ, பிள்ளை குட்டிகளோ,குடும்பமோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுத்து விடக் கூடாது என்றுகூறுகின்றான். ஆனால் இந்தக் கிரிக்கெட் விளையாடுபவர்களையும், பார்ப்பவர்களையும்அல்லாஹ்வின் நினைவை விட்டு முற்றிலும் தடுத்து விடுகின்றது.

அதிலும் குறிப்பாக தொழுகின்ற முஸ்லிம்கள் கூட, தொழச் செல்வதற்கு முன்னும்,ஸலாம் கொடுத்த உடனும் ஸ்கோர் கேட்கின்றனர். ஆட்டத்தின் கிளைமாக்ஸ் நேரமாகஇருந்தால் அஸர் தொழுகையின் ஜமாஅத்தை வேக்காடு வைத்து விட்டு ஆட்டம்முடிந்தவுடன் வீட்டில் தொழும் புண்ணியவான்களும் உண்டு. அந்த அளவுக்கு இந்தகிரிக்கெட் இவர்களைப் பித்துப் பிடித்தவர்களாக ஆக்கி விட்டது. இந்தக்காரணத்துக்காகவும் கிரிக்கெட் இந்தச் சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

வரம்பு மீற வைக்கும் வெறி உணர்வு

இஸ்லாம் மனிதனின் குண நல இயல்புகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் வாழ்க்கைநெறியாகும். மனித மனம் எதிலும் அளவு கடந்து சென்றால் அது தன்னையே அழித்துக்கொள்ளும் அபாய நிலைக்குப் போய் விடும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும்நஞ்சாகும் என்பதை இலக்கணமாகக் கணக்கிட்டு, அல்லாஹ்வை வணங்குவதில் கூடஓர் வரம்பை, வரையரையை நிர்ணயித்துள்ளது. எல்லை மீறுவதை அது தடை செய்துவிட்டது.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர்வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்கவழிபாடு களைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே சமாதானம்கூறிக் கொண்டு) "முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம்எங்கே?” என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப்போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்”என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்புநோற்கப் போகின்றேன்” என்றார். மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும்ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் முடிக்க மாட்டேன்”என்றுகூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படிஇப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே? அறிந்து கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட நான் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்புநோற்கவும் செய்கிறேன். விட்டு விடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன்.உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவேஎன் வழிமுறையை யார் கை விடுகின் றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5063

இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வணக்கத்தில் உள்ள வெறியைஅடித்து நொறுக்குகின்றார்கள். ஆனால் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் ஊண்,உறக்கம் போன்றவற்றைத் தியாகம் செய்து விட்டு தங்கள் கிரிக்கெட் வெறியைத் தீர்த்துக்கொள்கின்றனர். பிழைப்புக்குப் போகாமல், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச்செய்யாமல் சதாவும் ஊதாரித் தனமாக பகல் இரவாகக் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு டி.வி. பெட்டிகளில் விழிகளைப் பதித்துக் கொண்டு தங்களது உடல் நலத்தையேஅழித்துக் கொள்கின்றனர். மாணவர்கள் தங்கள் படிப்பையும், வியாபாரிகள் தங்கள்வியாபாரத்தையும் வீணாக்கிக் கொண்டு இந்த வீணான விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பாழாகும் பருவ வயதுக்கல்வி

கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியதும் மாணவர்கள் தங்கள் பாடங்களைப்படிப்பதில்லை. அதுவும் அண்மையில் நடந்த இந்தியா பாகிஸ்தான் தொடர் பள்ளிமாணவர்களின் தேர்வு நேரத்தில் நடந்தது. மாணவர்களின் படிப்பைப் பாதிக்கும் என்றுதெரிந்தும் ஆட்சி யாளர்கள் இந்தப் போட்டித் தொடரை அனுமதிக்கின்றார்கள் என்றால்இந்தக் கொடுமையை என்னவென்பது?

மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனால் இதுபோன்ற இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? இது அவனது எதிர்கால வாழ்க்கையை இருள்மயமாக்கும் செயலை அல்லவா இந்தக் கிரிக்கெட் செய்கின்றது? இனியும் இந்தக்கிரிக்கெட்டுக்குப் பச்சைக் கொடி காட்டலாமா?

முஸ்லிம்களை அழிக்கும் அமெரிக்காவுக்கு ஆதரவு

இன்று உலகத்தில் முஸ்லிம்களின் முதல் எதிரி அமெரிக்கா தான். ஆப்கானிலும்,இராக்கிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தது. இன்று வரைஇராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.தன் கள்ளப் பிள்ளை இஸ்ரேலைக்கொண்டு, பாலஸ்தீனில் முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கின்றது. இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தகைய அமெரிக்காவின் பெப்ஸி, கோகோ கோலா கம்பெனிகள் தான் இந்தக்கிரிக்கெட்டின் மூல தனமாக உள்ளன. இவர்களின் விளம்பரத்தில் தான் இந்தவிளையாட்டு நடக்கின்றது.இந்த நச்சுக் கம்பெனிகளை வளர்க்கும் இந்தக் கிரிக்கெட்டைஇஸ்லாமிய சமுதாயம் வரவேற்கலாமா? வளர்க்கலாமா?

தீமைக்குத் தீவிர விளம்பரம்

மனிதனின் உயிர்க் கொல்லியான சிகரெட், மதுபானக் கம்பெனிகளின் விளம்பரங்கள்இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் மற்ற நாடுகளின் அலைவரிசைகளில்இந்தக் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப் படும் போது, இந்த விளம்பரங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன. இப்படிப்பட்ட தீமைகளைத் தீனி போட்டு வளர்க்கும் இந்தத் தீயகிரிக்கெட்டை தீன் நெறியுள்ள ஒருவர் கண்டுகளிக்க முடியுமா? இதற்குத் தார்மீகரீதியிலான வரவேற்பும், ஒத்துழைப்பும் ஒரு முஸ்லிம் எப்படிக் கொடுக்க முடியும்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமை யாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)என்ற வசனத்தின்படி ஒரு முஸ்லிமுக்கு இது தடையல்லவா?

தனி மனித வழிபாடு

இன்று கிரிக்கெட் தறுதலைகள் வெளிநாடுகளில் விளையாடச் செல்லும்போதுவீட்டிலிருந்து புறப்பட்டுவிமான நிலையத்திற்குச் செல்லும் வரையிலான அவர்களின்அசைவுகளை தடபுடலாக செய்தி ஊடகங்கள் படம் பிடித்து, பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்வதுபோன்று இந்தக் கேடு கெட்டவர்களின் பயணம் சித்தரிக்கப்படுகின்றது. ஏதோ இவர்களின் பயணம் நாட்டின் வளர்ச்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தப் போவது போல் மாயைஏற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே கூத்தாடிகள் (நடிகர்கள்) ஏற்படுத்திய கேடு கெட்ட தாக்கத்திலிருந்து வெளி வரமுடியாத நமது நாட்டில் இந்த சூதாடிகளின் தொல்லை வேறு தாங்க முடியவில்லை.இன்னும் கொஞ்ச நாளில் இந்த கிரிக்கெட் மட்டைகள் தேர்தல் களத்திற்கும் வந்து விடும்.அந்த அளவுக்கு இந்தக் கிரிக்கெட் பைத்தியம் முற்றி வருகின்றது.

கொடி கட்டிப் பறக்கும் கிரிக்கெட் பெயர்கள்

இதில் மிக வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்று முஸ்லிம்கள்தங்கள்பிள்ளைகளுக்கு இந்தக் கிரிக்கெட்டுக்காரர்களின் பெயர்களைச் சூட்டுவது தான்.

உங்கள் பெயர்களில் அல்லாஹ்விடம்சிறந்தது அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான்என்பதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3975

என்னுடைய பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 2120)

இந்தப் பெயர்களையோ, அல்லது நபிமார்களின் பெயர்களையோ, அல்லதுஇஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர்களின் பெயர்களையோ வைக்காமல் இந்தஉதவாக்கரைகளின் பெயர்களைத் தங்கள் குழந்தை களுக்குச் சூட்டி மகிழ்கின்றனர்.இம்ரான் கான், வாஸிம் அக்ரம், அஸாருத்தீன் என்றுஇந்தக் கிரிக்கெட்டவர்களின்பெயர்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. இதிலும் ஏகத்துவ ரசிகர்கள், தாயத்து கட்டிய இந்தஇணை வைப்பாளர்கள் மீது காதல் கொள்வது வேதனையிலும் வேதனையாகும்.

ஆபாசம்

இந்தக் கிரிக்கெட்டைப் பார்க்க வரும் ரசிகைகள் நேரடி ஒளிபரப்பின் கேமராவைத் தங்கள்பக்கம் ஈர்ப்பதற்காக செய்யும் ஆபாசக் காட்சிகள் காணச் சகிக்காதவை. ஒரு பெண் தனதுமேலாடையைக் கழட்டிய அசிங்கமும் நடந்தேறியுள்ளது.

ஒரு முஸ்லிம் கிரிக்கெட்காரனின்பெயரைக் குறிப்பிட்டு, ஐ லவ் யூ என்று எழுதப்பட்டபதாகையை ஒரு பெண் காட்டுகின்றாள். உடனே அந்தப்பெண்ணை நோக்கி கேமராதிரும்புகின்றது. இதைப் பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தமுஸ்லிம் கிரிக்கெட்காரன் அந்தப் பெண்ணுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கின்றான்.அதையும் டி.வி.யில் காட்டுகின்றார்கள். கிரிக்கெட் வர்ணணையாளர்கள், கிரிக்கெட்டைவிட்டு விட்டு இந்த மானங்கெட்ட காட்சியை வர்ணிக்கின்றனர். மைதானமே கைகொட்டிச் சிரிக்கின்றது. அந்தப் பறக்கும் முத்தத்தைப் பெற்ற பாக்கியவதியும்முஸ்லிம்(?) என்பது தான் இதில்ஹைலைட்டான விஷயம். இந்த ஆபாசக்காட்சிகளை ஒருமுஸ்லிம் எப்படி கண்டு ரசிக்க முடியும்?

சூதாட்டம்

இந்த ஆட்டக்காரர் எப்படியும் செஞ்சுரி அடித்து நமது அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவென்று வாயைப் பிளந்து கொண்டுடி.வி.யிலும் மைதானத்தில் நேரடியாகவும் பார்த்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால்அந்த ஆட்டக்காரன் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே தேவை இல்லாமல்அவுட் ஆகிவெளியேறுகின்றான். தனது வீட்டில் ஏதோ இழவு விழுந்தது போல் இவன்சோகமாகி நிற்க, அவுட்டான ஆட்டக்காரனோ கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடுகின்றான்.

அது எப்படி? அவுட்டானால் பணம் யார் கொடுப்பார்கள்? அது தான் கிரிக்கெட் சூதாட்டம்.மேட்ச் ஃபிக்ஸிங் எனப்படும் இந்தச் சூதாட்டத்தில் ஒரு அணி வெற்றி பெறுவதுபோல்ஆட்டம் சென்று கொண்டிருக்கும் போது, அந்த அணி தான் ஜெயிக்கும் என்றுகோடிக்கணக்கில் சூதாட்டத்தில் பணம் கட்டுகின்றனர்.

இந்தத் தகவல் அந்த அணியின் தலைவனுக்கு, அந்தப் பிரபல ஆட்டக்காரனுக்குஅனுப்பப் படுகின்றது. உடனே அவன் அவுட்டாகி தன் அணியைத் தோல்விப் பாதைக்குஇழுத்துச் செல்கிறான். சூதாட்டம் நடத்துவோர்தங்களுக்குக் கிடைக்கும் கோடிகளில்அவுட்டான ஆட்டக்காரனுக்குப் பங்கு கொடுக் கின்றனர். இந்தமேட்ச் ஃபிக்ஸிங் ஊழல்வெளியில்தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன் நாறிப் போனது.

ஆட்டக்காரர்கள் கோடியில் புரள, இந்த மானங்கெட்ட விளையாட்டை வேலைமெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பவன் அன்றைய வருமானத்தை இழக்கின்றான்.

அல்லாஹ் தடை செய்துள்ள இந்தச் சூதாட்டத்தை ஒரு முஸ்லிம் பார்க்கலாமா? அதற்குஆதரவளிக்கலாமா?

ஒலிம்பிக் போட்டிகள்

இன்று ஒலிம்பிக் போட்டிகளை எடுத்துக் கொண்டால் அதில் கிரிக்கெட்டுக்குஇடமில்லை. அதில் இடம் பெறும் விளையாட்டுக்கள் பெரும்பாலும் வீர விளையாட்டுக்களாகவே உள்ளன. அந்த வீர விளையாட்டுக்கள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியின்பதக்கப் பட்டியலில் முன்னணி வகிக்கும் நாடுகளைப் பார்த்தால் அவைபொருளாதாரத்திலும், உழைப்பிலும் முன்னிலை வகிப்பதைக் காண முடியும்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்றநாடுகள் தான் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில்முன்னிலை வகிக்கின்றன. அதிகப்பட்சம் ஒரு மணி, அல்லது இரண்டு மணிநேரத்திற்குள்முடிந்து விடும் விளையாட்டுக்களை அந்த நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன.கிரிக்கெட்டை அந்த நாடுகள் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் கிரிக்கெட் நமது நேரத்தை சாப்பிடுவதைக் கணக்கில் கொண்டு தான். இதனால் விளையாடுபவர்கள்மட்டுமல்ல. பார்ப்பவர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகி விடுகின்றார்கள். சாப்பாட்டுக்குவழி பார்க்காமல் சோம்பேறிகளாக ஆகி விடுகின்றனர்.

சுறுசுறுப்பான வேலைகளுடன் சூடாகசம்பாதித்து, சுயமாக நிற்கும் அளவுக்கு அவர்கள்உயர்ந்து நிற்பதன் காரணம், நேரத்தின் அருமை பெருமை தெரிந்து நடப்பதால் தான்.இதனால் தான் அந்த மக்கள் கிரிக்கெட்டை தங்கள் நாட்டிற்குள் விடவில்லை.

அதிலும் குறிப்பாக அந்த நாட்டு மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய, உயிரைக்காத்துக் கொள்ளக் கூடிய தற்காப்புக் கலைகள், வீர விளையாட்டுக்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். நீச்சல், ஓட்டப் பந்தயம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல்,துப்பாக்கிசுடுதல், ஜிம்னாஸ்டிக், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற வீரவிளையாட்டுக்கள் மனிதனுக்கு வாழ்க்கையின் எந்தக் காலத்திலும் கை கொடுக்கும்விளையாட்டுக்கள் அல்ல கலைகள் ஆகும்.

இது போன்ற வீர விளையாட்டுக் களைமார்க்கமும் வரவேற்கின்றது.

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி (ஸல்)அவர்கள், அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில் உங்களின் தந்தை (இஸ்மாயீல்நபியவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நீங்கள் அம்பெயுங்கள் நான்இன்ன குலத்தாருடன் இருக்கின்றேன்” என்று கூறினார்கள். உடனேஇரு பிரிவினரில்ஒரு சாரார் அம்பெய் வதை நிறுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமல் நிறுத்திக் கொண்டீர்கள்”என்று கேட்டார்கள். அதற்குஅவர்கள், "தாங்கள் அவர்களுடன் இருக்கும் போது நாங்கள்எப்படி அம்பெய் வோம்” என்று கேட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால்நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய் யுங்கள்” என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ (ரலி)

நூல்: புகாரி 2899

இது போன்ற வீர சாகச விளையாட்டுக்களை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த சம்பவம்புகாரியில் 455, 5190 போன்ற எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவேசமுதாயத்திற்கும், நாட்டிற்கும் மார்க்கத்திற்கும் பயனளிக்கும் விளையாட்டுக்களை நாம்நமக்காகவும், நமது பிள்ளைகளுக்காகவும் தேர்வு செய்வது கடமையாகும்.