தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?

தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?

கேள்வி :

தவ்ஹீத் கொள்கையிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலும் இருக்கும் சிலர் கெட்ட வழிகளில் செல்கின்றனர். இதற்கு என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்.?

சிராஜுத்தீன், அம்மாபேட்டை.

பதில் :

மனிதர்களில் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்லர்.

மனிதன் செய்யும் தவறுகள், பாவங்கள் இரு வகைகளில் உள்ளன. ஒரு மனிதன் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகித்துக் கொண்டு பாவங்கள் செய்தால் அவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேற மாட்டான்.

ஆனால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை மறுக்கும் நடவடிக்கையில் இறங்கினால் அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால், அல்லாஹ்வை மறுத்தால், நபிமார்களை மறுத்தால், திருக்குர்ஆனை மறுத்தால், மறுமை வாழ்க்கையை மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.

இதுபோல் தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் விதியை ஏற்படுத்தி உள்ளது. அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையை மறுத்தால் அவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்.

இது அல்லாத பாவங்களைச் செய்தால் அதற்காக அவருக்கு அறிவுரைகளும் போதனைகளும் தான் செய்ய முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் விபச்சாரம் செய்தவர், மது அருந்தியவர் போன்றவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப்படவில்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகியாக உள்ளவர்கள் தாவாவைப் – பிரச்சாரத்தைப்  – பாதிக்கும் வகையிலான பாவங்களைச் செய்தால் அவர்கள் பொறுப்பில் இருந்தும், பிரச்சாரம் செய்வதில் இருந்தும் நீக்கப்படுவார்கள். அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்.

இது குறித்த விதிகள் தவ்ஹீத் ஜமாஅத் பைலாவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

19.01.2012. 2:55 AM

Leave a Reply