தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணைவைப்பவர்  பணி புரியும் பள்ளிவாசலில் தொழலாமா? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா?

டி.எ.முஹம்மது ரஃபி

பதில் :

இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை ஒருவர் செய்தால் அவரைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது பற்றி விரிவாக நமது இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால்.. ?

இணைவைக்கும் இமாமை பின்பற்றலாமா?

இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?

இணைவைக்கும் இமாமை பின்பற்றலாமா?

இணைவைக்கும் இமாம் ஒரு பள்ளியில் பணிபுரிவதால் அந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக பள்ளியில் இணைவைப்புக் காரியங்கள் அரங்கேறினால் அந்தப் பள்ளியில் தொழக் கூடாது. குறிப்பிட்ட நான்கு தன்மைகள் ஒரு பள்ளியில் இருந்தால் அந்தப் பள்ளியிலும் தொழக்கூடாது.

தாயத்து அணிபவரும், அதை மற்றவருக்கு அணிவித்து விடுபவரும் இணைவைப்பவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கயிறுக்கோ, இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகி விடுகிறான்.

مسند أحمد بن حنبل (4/ 156)

 17458 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد بن عبد الوارث ثنا عبد العزيز بن مسلم ثنا يزيد بن أبي منصور عن دخين الحجري عن عقبة بن عامر الجهني : ان رسول الله صلى الله عليه و سلم أقبل إليه رهط فبايع تسعة وامسك عن واحد فقالوا يا رسول الله بايعت تسعة وتركت هذا قال ان عليه تميمة فادخل يده فقطعها فبايعه وقال من علق تميمة فقد اشرك

تعليق شعيب الأرنؤوط : إسناده قوي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் வாங்கவில்லை. அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப் பிரமாணம் வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என்று அப்போது மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அஹ்மத்

صحيح البخاري

3005 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ أَبَا بَشِيرٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ عَبْدُ اللَّهِ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: وَالنَّاسُ فِي مَبِيتِهِمْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَسُولًا أَنْ: «لاَ يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ، أَوْ قِلاَدَةٌ إِلَّا قُطِعَتْ»

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிரயாணம் ஒன்றில்  இருந்தேன்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  தூதுவர் ஒருவரை அனுப்பி,"எந்த  ஒட்டகத்தின் கழுத்திலும்   கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட  வேண்டும்'' என்று அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பஷீர் (ரலி)

நூல் : புகாரி 3005

யோகாசனத்தைப் பொறுத்த வரை அதில் செய்யப்படும் பயிற்சிகள் சரியானவையாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு முறைகள் நுழைக்கப்படுகின்றன. அதிலுள்ள செயல்கள் இந்து மதத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. எனவே இது போன்ற மத அனுஷ்டானங்களைத் தவிர்த்து, உடற்பயிற்சிக்கான செயல்களை மட்டும் செய்வது தவறில்லை.

Leave a Reply