தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..?

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..?

தொழுகையின் போது முன்னால் வைத்துக் கொள்ள வேண்டிய சுத்ரா எனும் தடுப்பு கிடைக்காவிட்டால் ஒரு கோடு போட்டுக் கொண்டால் போதுமா? பள்ளிவாசலில் ஒவ்வொரு வரிசைக்கும் போடப்பட்டுள்ள கோடு சுத்ராவாக ஆகுமா?

சப்ரி

பதில் :

நீங்கள் கூறுவது போன்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா மற்றும் பல நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن أبي داود

 689 – حدثنا مسدد ثنا بشر بنن المفضل ثنا إسماعيل بن أمية حدثني أبو عمرو بن محمد بن حريث أنه سمع جده حريثا يحدث عن أبي هريرة  : أن رسول الله صلى الله عليه و سلم قال " إذا صلى أحدكم فليجعل تلقاء وجهه شيئا فإن لم يجد فلينصب عصا فإن لم يكن معه عصا فليخطط خطا ثم لا يضره ما مر أمامه " .قال الشيخ الألباني : ضعيف

مسند أحمد بن حنبل

 7454 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق ثنا معمر والثوري عن إسماعيل بن أمية عن عمرو بن حريث عن أبيه عن أبي هريرة رفعه قال : إذا صلى أحدكم فليصل إلى شيء فإن لم يكن شيء فعصا وان لم يكن عصا فليخطط خطا ثم لا يضره ما مر بين يديه – تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف

مسند أحمد بن حنبل

 7604 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق ثنا معمر والثوري عن إسماعيل بن أمية عن أبي عمرو بن حريث عن أبيه عن أبي هريرة رفعه قال : إذا صلى أحدكم فليصل إلى شيء فإن لم يكن شيء فعصا فإن لم يكن عصا فليخطط خطا ثم لا يضره ما مر بين يديه – تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف

தொழும்போது ஏதாவது பொருளை நோக்கித் தொழ வேண்டும். எந்தப் பொருளும் கிடைக்காவிட்டால் கைத்தடியை வைத்துக் கொள்ளட்டும். கைத்தடி கிடைக்காவிட்டால் ஒரு கோட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் யாரேனும் அவனுக்கு முன்னால் கடந்து சென்றால் அது (தொழுகைக்கு) பாதிப்பாகாது.

என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

இதை அபூஅம்ர் பின் முஹம்மத் பின் ஹுரைஸ் என்பார் தனது பாட்டனார் வழியாக அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அபூஅம்ர் என்பவர் யார் என்று அறியப்படாதவர். அவரது பாட்டனாரும் யார் என அறியப்படாதவர். ஆகவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

எனவே கோடு என்பது சுத்ராவாக ஆகாது. ஏதாவது பொருளைத் தான் சுத்ராவாக வைக்க முடியும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit