தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைத் தமிழில் ஓதலாமா?

பதில் :

தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். குர்ஆன் என்பது அரபுமொழியில் இறைவன் கூறிய வார்த்தைகளாகும்.

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا (20)73

குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும்  உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்!

திருக்குர்ஆன் 73 : 20

இறைவன் எந்த வார்த்தைகளை நமக்கு அருளினானோ அவற்றை அப்படியே கூறினால் தான் நாம் இறைவனுடைய சொற்களைக் கூறியவர்களாக முடியும். இவ்வாறு செய்தாலே நாம் குர்ஆனை ஓதினோம் என்று பொருள்.

தர்ஜுமா என்பது குர்ஆன் அல்ல. குர்ஆனை விளங்கிக் கொள்வதற்காக மொழிபெயர்க்கப்பட்ட விளக்கமாகும். இதன் கருத்து இறைவனுடையது என்றாலும் இதிலுள்ள சொற்கள் மனிதர்களுடையது. எனவே குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக இதைத் தொழுகையில் ஓதக் கூடாது.

தமிழில் ஓதக் கூடாது என்பதை அரபுமொழி சிறந்த மொழி என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. திருக்குர்ஆன் வசனத்தை அதே அர்த்தம் தரும் வேறு அரபி வார்த்தைகளாக மாற்றி ஓதினாலும் அதுவும் குர்ஆன் ஓதியதாக ஆகாது. அல்லாஹ் அருளிய சொல்லை அப்படியே ஓதினால் தான் அது குர்ஆன் ஓதியதில் அடங்கும்.

அரபி வாசிக்கத் தெரியாதவர்கள் அரபி தெரிந்தவர்களிடம் சென்று சூராக்களை அரபியில் எப்படி வாசிப்பது என்பதைத் தமிழில் எழுதி வாங்கி கற்றுக் கொள்ளலாம். எனினும் இவர்கள் அரபு மொழியில் பிழையின்றி குர்ஆனை உச்சரிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

Leave a Reply