நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா

நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா

ரண்டு வானவர்கள் இருப்பதாகவும் ஒருவர் தோள் புஜத்தில் அவர்கள் அமர்ந்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நன்மையைப் பதிவு செய்வதாகவும் மற்றவர் தீமையைப் பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இது உண்மையா

அப்துல் அலீம்

பதில்

இரண்டு வானவர்கள் உள்:ளதாகவும் அவர்கள் அனைத்தையும் பதிவு செய்வதாகவும் குர்ஆன் கூறுகிறது. ஒருவர் நன்மையை எழுதுவார் மற்றவர் தீமையை எழுதுவார் என்பதற்கு நாம் எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. குர்ஆனில் வந்துள்ள கீழ்க்கண்ட செய்திகளைத் தவிர ஹதீஸ்களில் மேலதிகமாக எதுவும் கூறப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.. வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன் 50:16-18

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். .நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

திருக்குர்ஆன்  82:10-12

Leave a Reply