நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன.

பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் எனப் பலரும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதனால் விபரீதங்கள் ஏற்படுகின்றன.

மேலும் தேவையில்லாமல் நம் சமுதாயப் பெண்கள் வெளியூர்களில் சுற்றும் நிலை ஏற்படுகிறது. கணவர் போன் செய்தால் வெளியூரில் இருந்து கொண்டே வீட்டில் இருப்பதாக பெண்கள் சிலர் பொய் சொல்லும் நிலைமையும் உள்ளது.

வீட்டை விட்டு சில பெண்கள் ஓடிப் போவதற்கும், தவறான உறவு வைப்பதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது. இதைத் தடுக்க வழியே இல்லையா?

ஆண்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்ற பதிலைச் சொல்லாமல் இதற்கு உருப்படியான திட்டம் இருந்தால் சொல்லுங்கள்!

அக்பர், பரங்கிப்பேட்டை.

பதில் :

இதற்கு சரியான தீர்வுகளை நாம் காணமுடியும்.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தமது மனைவியரை அவர்களின் தாய்வீட்டில் விட்டுச் செல்லலாகாது. கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது தாய் வீட்டில் போய் தங்க அனுமதிக்கவும் கூடாது. காரணம் கணவனைப் பிரிந்துள்ள தனிமை காரணமாக அவர்கள் சறுகிவிட வாய்ப்பு உள்ளது. மாமியாருடன் இருக்கும் போது, கணவனின் சகோதரிகளுடன் இருக்கும் போது அப்பெண்களிடம் வாலாட்ட நினைக்கும் ஆண்களுக்கு அச்சம் ஏற்படும். அந்தப் பெண்களுக்கும் அச்சம் ஏற்படும். இது அவர்கள் வழிதவறிடாமல் தடுத்து நிறுத்தும்.

தாய் வீட்டில் இருந்தால் அதிகமான தாய்மார்கள் மாமியார் போல் கண்காணிக்க மாட்டார்கள். சில தவறு செய்வதைக் கண்டாலும் அதை அம்பலப்படுத்தினால் மகளின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் அதை மறைப்பார்கள். தாயார் மறைப்பார்கள் என்ற தைரியம் மேலும் தவறூ செய்வதைத் தூண்டும்.

அதுபோல் வெளிநாடுகளில் பணி புரிவோர் எக்காரணம் கொண்டும் தனிக்குடித்தனம் வைக்கக் கூடாது. இது தாய் வீட்டில் இருப்பதை விட ஆபத்தானது. தக்க காரணம் இருந்தால் கூட நான் தாயகத்தில் செட்டிலாகும் போதுதான் தனிக்குடித்தனம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கே முழுமையாக அனுப்பாமல் அவர்களின் அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணம் அனுப்ப வேண்டும். மிதமிஞ்சிய பணப்புழக்கம் மற்றவர்களுக்குத் தெரியாமல் தவ்று செய்ய நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இது போக நவீன வசதிகளைப் பயனப்டுத்தியும் இதை தடுக்க முடியும்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு சமுதாயத்தின் உள்ளூர் தலைவர்களுக்கும், குடிமக்களுக்கும் இருந்தால் மிக எளிதாக இது போன்ற எல்லாத் தீமைகளையும் 95 சதவிகிதம் தடுத்து நிறுத்தி விடலாம். இப்படி நடக்கும் பெண்களைத் தண்டிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவது மட்டும் இதற்கு பயன்படாது. நடக்காமல் தடுப்பது தான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஊரின் அளவைப் பொருத்து தேவையைப் பொருத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்ய ஒரு ஜமாஅத் தயாராக இருந்தால் இதற்கு சரியான தீர்வு காணலாம்.

ஊரின் அனைத்து தெருக்களிலும் தெருவுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். ஒரு கேமரா 500 முதல் 2000 வரை தான் ஆகும்.

ஜமாஅத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பு அறையில் அனைத்தையும் டிஸ்பிளே செய்யும் வகையிலும், பதிவு செய்யும் வகையிலும் ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும். இதற்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகலாம்.

இதைச் செய்து விட்டால் ஒவ்வொரு தெருவிலும்

மக்களின் நடமாட்டம்,

வீடுகளுக்குள் நுழைபவர்கள்,

எவ்வளவு நேரம் கழித்து வெளியே வருகிறார்கள்,

வீட்டில் இருந்து யார் எப்போது வெளியேறுகிறார்கள்

என்பதைக் கண்காணிப்பு அறையில் இருந்து பார்க்க முடியும்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வீட்டில் யாராவது நுழைந்தார்களா? அல்லது யாராவது வெளியேறினார்களா என்பதை தேவைப்படும் போது ரீபிளே செய்து பார்க்க முடியும்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டால் என் வீட்டில் இந்த நாளில் இந்த நேரம் முதல் இந்த நேரம் வரை யாராவது சென்றார்களா? வெளியேறினார்களா? என்று கண்கானிப்பு அலுவலகத்தில் விசாரிக்கலாம். வெளியூரில் இருந்து கொண்டு வீட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி இருந்தால் தெரிந்து போய் விடும்.

இப்படியெல்லாம் கண்கானிப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதை அனைவருக்கும் விளம்பரப்படுத்த வேண்டும். நாம் ஒவ்வொரு நேரமும் கண்காணிக்கப்படுகிறோம் என்ற அச்சம் வந்து விட்டால் அடுத்த விநாடியே இது ஒழிந்து போய் விடும்.

இது தவிர கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இணைய தள வசதியுடன் ஒரு கம்ப்யூட்டரை ஏற்பாடு செய்து வீட்டில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி வீட்டில் நடப்பது அனைத்தையும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கும் வகையிலான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி எநத நேரமும் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இந்த யோசனையை ஜமாஅத்துக்கு தெரிவித்து செயல்படுத்திப் பாருங்கள்.

எந்த சாலைகளில் கண்காணிப்பு கேமரா உள்ளது தெளிவாகத் தெரிகின்றதோ அந்த சாலைகளில் குற்றச் செயல்கள் அரிதாகவே நடக்கின்றன. காரணம் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற அச்சம் ஏற்படுவதே இதற்குக் காரணம்.

04.03.2010. 10:14 AM Edit · Hide

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit