ஏகத்துவம் நவம்பர் , டிசம்பர் 2005 விவாதங்கள் ஓய்வதில்லை:நீடூரிலிருந்து வேலூர் வரை எம். ஷம்சுல்லுஹா எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிதுஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்தமவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடையஉள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது. தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில்நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மைவெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப்பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம்வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவசிந்தனை. இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை! அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன்வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயேஎதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்தஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன. இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில்எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம். இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆயுதம் ஏந்தி ஒரே ஒரு முறைதான் சிலைகளை உடைத்தார்கள். ஆனால் வாதம் என்றஆயுதம் ஏந்தி அறிவுப் பூர்வமாக எதிரிகளின் தலைகளைஉடைத்து விட்டார்கள். இதை அல்குர்ஆனில் அவர்களைப்பற்றிக் கூறும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஷம்சுல்ஹுதாவுடன் ஒருசந்திப்பு உண்மை என்று தெரிந்து அதில் உறுதியாக ஆனதும், இதற்குஆலிம்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதைஎதிர் கொள்ளும் முகமாக, நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவின்முதல்வர், நீடூர் ஜாமிஆ பள்ளிவாசல் இமாம், மாநிலஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதாஅவர்களிடம் சந்திப்பதற்கான நாள், நேரம் கேட்டோம். அவர்களும் அதற்கு ஒப்புதல் தந்தார்கள். ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு, பி. ஜைனுல் ஆபிதீன், எம். ஷம்சுல்லுஹா, முஹம்மது யூசுப் மிஸ்பாஹி ஆகிய மூவரும்சந்திக்கச் சென்றனர். ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில்அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும் என்ற விதியைஏற்படுத்தியிருந்தார். பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும்ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லைஎன்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்றுகண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார். ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு ஜாமிஆ பள்ளிவாசலில் உள்ளஅவரது அறையில் சந்திப்பு துவங்கியது. சந்திப்பு துவங்கும்முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிகார்டரில் பதிவு செய்துகொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார். (அப்போது நடைபெற்ற உரையாடல் விபரம் இன்ஷா அல்லாஹ்ஏகத்துவத்தில் பின்னர் வெளியிடப்படும்) இதனையடுத்து, கிளியனூர் மத்ரஸா ரஹ்மானிய்யாவின்முதல்வர் எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களை பி.ஜே. மற்றும்ஷம்சுல்லுஹா ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். இந்தவிவாதத்தின் போது மதரஸா மாணவர்கள் அனைவரும்அருகில் இருந்தனர். பி.ஜே. தொடுத்த கேள்விகளுக்குஅப்துஸ்ஸலாம் அவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பலகேள்விகளுக்கு, பார்த்துச் சொல்கிறேன் என்ற பதிலைத் தான்தர முடிந்தது. (இந்த விவாதத்தில் நடந்த உரையாடல்களும் பின்னர்வெளியிடப்படும்) திருப்பந்துருத்தி முஹம்மது அலீ அவர்கள் அத்திக்கடையில்பணி புரிந்து கொண்டிருந்தார்கள். இவர் தான் பி.ஜே.யின்ஆசிரியர். அவரையும் அத்திக்கடையில் போய் சந்தித்து, இருவருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது. அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா மதரஸாவின் முதல்வராகஉள்ள முஹம்மத் குட்டி அவர்களையும் பி.ஜே. சந்தித்து, விவாதித்தார். வலிமார்கள் மாநாடு என்ற பெயரில் தஞ்சையில் நஞ்சைக்கக்கும் ஒரு மாநாடு! இறந்து விட்ட பெரியார்களிடம்பிரார்த்திக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் உலமாக்கள்உரத்து முழங்கினர். இதைக் கண்டித்து அன்று சங்கரன்பந்தலில்பணியாற்றிய பி.ஜே. தனது ஒரு மாதச் சம்பளத்தைச் செலவுசெய்து, ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் ஒருபிரசுரத்தை வெளியிட்டார். இது ஆலிம்கள் வட்டாரத்தில் பெரும் புயலையும், பூகம்பத்தையும் கிளப்பியது. இதை விசாரணை செய்வதற்காகதிருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா கூடப் போவதாகவும், அந்த விசாரணையில் பி.ஜே. கலந்து கொள்ள வேண்டும்என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நேரத்தில் பி.ஜே. பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஜமாஅத்துல் உலமாமாவட்டச் செயலாளர். ஷம்சுல்லுஹா செயற்குழு உறுப்பினர். இந்தக் கூட்டத்திற்கு பி.ஜே., ஷம்சுல்லுஹா, மறைந்த பி.எஸ். அலாவுதீன் ஆகியோர் சென்றிருந்தனர். மாநில ஜமாஅத்துல்உலமா தலைவர் எஸ்.ஆர் ஷம்சுல் ஹுதா தலைமையில்நடந்த அந்தக் கூட்டத்தில் விசாரணை தொடங்கியது. வாதங்கள்நடந்தன. முடிவில் மூவரையும் நீக்கப் போவதாக ஜமாஅத்துல்உலமா அறிவித்தது. தேவையில்லை உங்கள் ஜமாஅத்துல்உலமாவின் பொறுப்பு! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றுதூக்கி எறிந்து விட்டு வந்தனர். இதுவெல்லாம் தனி நபராக இருப்பினும், ஒரு கூட்டமாகக்கூடியிருக்கும் சபையாக இருப்பினும் வாதக் களங்களைச்சந்திப்பதற்கு நாம் தயங்கியதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். முபாஹலாவும் முஜாதலாவும் ஏகத்துவக் கொள்கை வேர் பிடித்துக் கொண்டிருக்கும்வேளையில் காயல்பட்டிணத்தில், அல்லாஹ்விடம் மட்டுமேஉதவி தேட வேண்டும் என்ற தலைப்பில் ஓர் உரை! அந்தத்தலைப்பில் பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, முஹய்யித்தீனிடம் உதவி தேடலாம், இது தொடர்பாகஎன்னிடம் முபாஹலா செய்யத் தயாரா? என்று ஒரு துண்டுச்சீட்டு மேடைக்கு வருகின்றது. அதைப் பார்த்து விட்டு, "முபாஹலாவுக்குத் தயார்! ஆனால் அதற்கு முன்னால்முஜாதலா (விவாதம்) இருக்கின்றது; விவாதத்திற்குப் பிறகுதான் முபாஹலா'' என்று பி.ஜே. அறிவித்தார். …
விவாதங்கள் ஓய்வதில்லை : நீடூரிலிருந்து வேலூர் வரை Read More