பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் ஆக வேண்டுமா? அல்லது வீட்டில் தொழலாமா? ஏ. ஸபுருன்னிஸா, நாகூர் பதில் : ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு மட்டும் தான் கட்டாயம். பெண்களுக்கு கட்டாயமில்லை. பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், அவர்கள் வீட்டில் தொழுவதே […]

குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்

ஏகத்துவம் நவம்பர் 2007 குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன் மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையை படித்தவர்களும் படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. […]

விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே!

ஏகத்துவம் நவம்பர் 2007 விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே! ஒரு சில இடங்களைத் தவிர இந்தியா முழுவதும் கடந்த 14.10.07 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ரமளானின் 30ஆம் இரவு மேக மூட்டத்தின் காரணமாக பிறை தென்படாததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி 30 நோன்புகள் பூர்த்தியாக்கப்பட்டு பெருநாள் கொண்டாடப்பட்டது. பிறை பார்க்கத் தேவையில்லை; கணித்தல் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையுடைய ஜாக் இயக்கத்தினர் 12.10.07 […]

பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்

ஏகத்துவம் நவம்பர் 2007 பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் எம். ஷம்சுல்லுஹா ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும். தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது. இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே […]

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஏகத்துவம் நவம்பர் 2007 ஆறு நோன்பு ஆதாரமற்றதா? – மறு ஆய்வு பி. ஜைனுல் ஆபிதீன் "யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல […]

புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்

ஏகத்துவம் நவம்பர் 2007 புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான் "ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957 இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும். பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக […]

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

ஏகத்துவம் 2007 அக்டோபர் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக "இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்’ என்ற தலைப்பில் கண்டோம். ஒரு கொடியில் இரு மலர்கள் என்பது போல் இந்த ரமளான் மாதத்தில் இரண்டாவது சிறப்பிதழாக "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். கொளுத்தும் வெயிலில் கோயிலைச் சுற்றி தரையில் உருண்டு […]

இறைப் பாதையும் சிறைப் பயணமும்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 இறைப் பாதையும் சிறைப் பயணமும் எம். ஷம்சுல்லுஹா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடத்தில் போதிக்கும் போது, இறை மறுப்பாளர்கள் மூன்று விதமான சதித் திட்டங்களைத் தீட்டினர். (முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். அல்குர்ஆன் 8:30 இந்த வசனத்தில் […]

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர் இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது. ஆபாசப் படங்களைத் […]

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

ஏகத்துவம் செப்டம்பர் 2007 இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது. திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் […]