303. பல இருள்கள்

திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது. ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் 'இருள்கள்' என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

303. பல இருள்கள் Read More

302. இறை ஒளிக்கு உவமை இல்லை

இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும்போது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணெய்யை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்குக் …

302. இறை ஒளிக்கு உவமை இல்லை Read More

301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்

அடிமைகளாக விற்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டப்படக் கூடாது என்பதற்காகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் விடுதலைப் பத்திரம் எனப்படும். அந்தத் தொகையைச் சம்பாதித்து கொடுத்து விடுவதாகவோ, அல்லது வேறு ஏதேனும் உறுதிமொழியின் அடிப்படையிலோ தங்கள் எஜமானர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அடிமைத் …

301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம் Read More

300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது. பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது பற்றிய விளக்கத்தை 472 வது …

300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்? Read More

299. மக்கள் முன்னிலையில் தண்டனை

இவ்வசனத்தில் (24:2) தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தண்டனைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

299. மக்கள் முன்னிலையில் தண்டனை Read More

298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது

ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது. இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், இறந்தவர்களை வழிபடுதல், இறந்தவர்களிடம் …

298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது Read More

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர்பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது என்று மக்கள் நம்பி …

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? Read More

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் …

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் Read More

295. முதல் மார்க்கம் இஸ்லாம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36) முஸ்லிம்கள் என்று குறிப்பிடுகின்றன. …

295. முதல் மார்க்கம் இஸ்லாம் Read More

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள்

இவ்வசனத்தில் (22:52) இறைத்தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. 'ஓதிக் காட்டியதில்' என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் 'உம்னிய்யத்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் Read More