பிறை கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு

ஏகத்துவம் அக்டோபர் 2006

பிறை கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு

நம் வழி! தனி வழி! என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.பிற மதத்தின் சாயல் கூட தாம் இருக்கும் போதும்,இறந்த பின்னரும் தமது மார்க்கத்தின்மீது படியாதவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.அல்லாஹ்வின்இந்தத் தூய மார்க்கம் யாரிடத்திலும், எந்த மதத்திடமும், எந்தமார்க்கத்திடமும் கொள்கைகளைக் கையேந்தும் நிலையில் இந்தச் சமுதாயத்தைஅவர்கள் விட்டுச் செல்லவில்லை. அது ஆன்மீகமாக இருந்தாலும் சரி! அரசியலாகஇருந்தாலும் சரி! எந்த ஒரு பிரச்சனைக்கும் பிற மதத்தைப் பார்த்து காப்பியடிக்கத்தேவையில்லாத அளவுக்குத் தன்னிறைவு பெற்ற மார்க்கமாக இதை அல்லாஹ்வும்அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஆக்கி வைத்துள்ளார்கள்.

தன்னுடைய மார்க்கத்தில் உள்ள எந்தவொரு வணக்கமும் பிற மத வணக்கத்திற்குஒப்பானதாக அமைந்து விடக் கூடாது என்ற விஷயத்தில் கண்ணும்கருத்துமாகவும்,அந்த விஷயத்தில் கடுமையாகவும் நடந்திருக்கின்றார்கள்.

தொழுகைக்குத் தடை செய்யப்பட்ட நேரங்கள்

சூரியன் உதிக்கின்ற நேரத்திலும்அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில்அது ஷைத்தானின்இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 583, 3273

இந்த ஹதீஸ்களில் சூரியன் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையில்உதிக்கின்றான். அதனால் இந்த நேரங்களில் தொழ வேண்டாம் என்ற காரணம் இடம்பெற்றிருக்கின்றது. இதை விடத் தெளிவான காரணம் முஸ்லிமில் வரும் 1373வதுஹதீஸில் அம்ரு பின் அபஸா அஸ்ஸுலமீ அறிவிக்கும்நீண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது இந்த நேரத்தில்தொழப்படும் தொழுகை, மாற்று மதத்தினரின் வணக்க நேரத்திற்கு ஒத்ததாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கூட நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்துள்ளார்கள்.

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்தல்

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளர விடுங்கள். மீசைகளைஒட்ட நறுக்குங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 5892

இணை வைப்பவர்களின் மார்க்க வழிமுறைகளுக்கு நமது வழிமுறைகள் ஒத்திருக்கக்கூடாது என்று கட்டளை இடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுததை நான் கண்டேன். அங்கு தங்கியஉமர் (ரலி) அவர்கள், "இணை வைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்துதிரும்பிச் செல்வதில்லை. மேலும் அந்த இணை வைப்பாளர்கள், "ஸபீரு மலை (சூரியஉதயத்தால்) ஒளிரட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ இணைவைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்” என்று கூறி விட்டு, சூரியன் உதிக்கும் முன்பேஅங்கிருந்து திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பர்: அம்ரு பின் மைமூன்

நூல்: புகாரி 1684

ஹஜ்ஜில் உள்ள இந்த வணக்கத்தில் கூட இணை வைப்பவர்களின் சாயல் படக் கூடாதுஎன்பதில் அதிகப்பட்ச கவனம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

யூத, கிறித்தவர்களுக்கு மாறு செய்தல்

யூதர்களும் கிறித்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. எனவே நீங்கள்(முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5899

யூத, கிறித்தவர்களுக்கு மாறு செய்யுமாறு தன் சமுதாயத்திற்கு நபி (ஸல்) அவர்கள்கட்டளையிடுகின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்புநோற்று,நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது)யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர்.அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம்(முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்றுகூறினார்கள். ஆனால்,அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 1916

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு யூதர்களுக்குமாற்றம் செய்துஇருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம்.

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளைவீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும்,குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம்வினவப்பட்ட போது,

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவேமாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக்கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 2:222)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிரஅனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், இவர் (நபி(ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமேவிட்டு வைக்க விரும்பவில்லை.அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை என்று பேசிக்கொண்டனர்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்455, அபூதாவூத்225

இந்த ஹதீஸும் யூதர்களின் கலாச்சாரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்தமார்க்கம் வேறு எந்த ஒரு மார்க்கத்திற்கும் ஒரு போதும் ஒப்பானதல்ல என்றுஉணர்த்துவதற்காகத் தான்.

பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு தீய ஆசை இறைத் தூதருடன் இருந்தமக்களிடமே தலைகாட்டியிருக்கின்றது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன்ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒருஇலந்தை மரம்இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின்போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்துஅன்வாத்’ என்று அதற்குச்சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போதுநபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து’என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம்(அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, "என்உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை)அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல்கேட்கிறீர்கள். (அதாவது) பனூஇஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பலகடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்’ என்று கேட்க,அதற்கு மூஸா (அலை) அவர்கள், "நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்’ என்றுபதிலளித்தார்கள்.இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள்உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரலீ)

நூல்: திர்மிதீ 2106,அஹ்மத் 20892

இப்படிப்பட்ட தாக்கம் தன்னுடைய சமுதாய மக்களிடம் ஊடுறுவும்; அதற்கு இந்தச்சமுதாயம் பலியாகும் என்பதை நன்கு தெரிந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இது குறித்து மிகக் கடுமையாகவே எச்சரித்துள்ளார்கள்.

"உங்களுக்கு முன்னிருந்த (யூத, கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம்,அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர்உடும்புப் பொந்துக்குள் புகுந்திருந்தால் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறித்தவர்களையுமாநீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்:அபூஸயீதுல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 3456

பிறையும் பிறமதக் கலாச்சாரமும்

முஸ்லிம்களைத் தவிர உலகெங்கிலும் உள்ள மக்களின் பண்டிகைகள் மற்றும்திருவிழாக்கள் சூரியக் கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியேகணிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் பிறை பார்த்த பிறகு தான்தீர்மானிக்கப்படுகின்றது. முன் கூட்டியேதீர்மானிக்கப் படுவதில்லை.

"கிறிஸ்துமஸ் எப்போது என்பதை அந்த ஆண்டின் துவக்கத்திலேயே காலண்டரில் பதிவுசெய்யப்பட்டு விடுகின்றது. இது போன்று நீங்களும் உங்கள் பெருநாளை முடிவுசெய்தால் என்ன?” என்று மாற்று மதத்தவர்களும் நம்மிடம் கேட்கின்றார்கள்.

நம்முடைய மார்க்கத்தில் உள்ளவர்களும், நபி (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள்"தாத்து அன்வாத்’ எனப்படும் மரத்தைக் கேட்டது போன்று, "இப்படிப்பட்ட அறிவியல்வளர்ச்சியடைந்த காலத்தில் முன் கூட்டியேகணித்தால் என்ன?” என்ற கேள்வியை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுவரை இப்படிக் கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தவர்கள் இப்போது தெளிவானமுடிவுக்கும் வந்து கணிப்பை அமுல் படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். அதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புகாரி 3456வது ஹதீஸில் கூறுவது போன்றுயூதர்களின் பாதையில் தெளிவாக இறங்கி விட்டார்கள்.

இந்த அறிவிப்பை நன்றாகப் படித்துப் பாருங்கள். 06.09.06 அன்றுஇந்த அறிவிப்பைவெளியிடுகின்றார்.

ஒரு மாதம் என்பது 29 இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்புநோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாகஎண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1907

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்.உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாகமுழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1909

உண்மையில் இவர்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகின்றவர்களாக இருந்தால் இந்தஹதீஸ்களின் அடிப்படையில் என்ன செய்திருக்க வேண்டும்?

"பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் 22.09.06 தேதியுடன் ஷஅபான் பிறை 29முடிகின்றது. அன்று இரவு பிறை பாருங்கள். பிறை தென்படாவிட்டால் முப்பதைப்பூர்த்தி செய்து, 24.09.06 அன்று நோன்பு நோற்க வேண்டும்” என்று சொல்லியிருக்கவேண்டும்.

ஆனால் அப்படிச் சொல்லவில்லை. "பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரமளான்மாதம் 22.09.06 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது, அதனால் 23.09.06 அன்றுநோன்பு துவக்கம்” என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

06.09.06 அன்று இவர்கள் எந்தப் பிறையைப் பார்த்தார்கள்? ரமளான்பிறையையா?ஷஅபான் பிறையையா?

பிறையைப் பார்த்ததன் அடிப்படையில் 22ம் தேதியுடன் ஷஅபான் மாதம்முடிவடைகின்றது என்பதை 6ஆம் தேதியே எப்படிச் சொல்ல முடியும்?

ஷஅபான் மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்று இவர்களுக்கு வஹீவந்ததா?

22ஆம் தேதியுடன் ஷஅபான் முடிவடைகின்றது என்று கூறி, 6ஆம் தேதியே அறிக்கைவிட்டுச் சொல்வதன் மூலம் இவர்கள் தெளிவாகக்கணிப்புக்குள் இறங்கி விட்டார்கள்.மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ்களைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றுசந்தேகமறத்தெரிகின்றது.

ஹதீஸைத் தூக்கி எறிந்து விட்டதுதெரிந்து விடக் கூடாது என்பதற்காக, "பிறைபார்க்கப்பட்டதன் அடிப் படையில்” என்ற வார்த்தையைச் சேர்த்து ஒரு நயவஞ்சகநாடகத்தையும் நடத்துகின்றார்கள். அதாவது அப்பட்டமாக யூத, கிறித்தவ மற்றும்இணை வைப்பவர் களின் கலாச்சாரத்தை, கணிப்பு என்ற பெயரில் திணிக்கின்றார்கள்.ஒரு பக்கம் பக்கா கணிப்பு! மற்றொரு பக்கம் பிறை பார்த்ததாக ஒரு நடிப்பு! என தவ்ஹீதுசகோதரர்களிடம் இரட்டை வேடம் போடுகின்றார்கள்.

சூரியக் கணக்கும் சந்திரக் கணக்கும்

தொழுகை நேரத்திற்காக சூரியக் கணக்கைக் கணிக்கின்றோமே அது போல் சந்திரக்கணக்கைக் கணித்தால் என்ன? என்ற வாதத்தை எழுப்புகின்றார்கள்.

பல்வேறு காரணங்களால் இது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

சூரியக் கணக்கை கணிப்பதன் மூலம்மார்க்கத்தில் எதையும் நாம் மாற்றவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் லுஹர் தொழுபவர்களாகஇருந்தனர் (புகாரி 541) என்ற ஹதீஸ் லுஹர் தொழுகையின் நேரத்தை விளக்குவதாகஅமைந்துள்ளது.

நாம் நமதூரில் சூரியன் எத்தனை மணிக்கு உச்சி சாய்கின்றது என்றுகணித்துக்கொள்கின்றோம். இங்கு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு அறிவியலைத்துணைக்கு அழைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் பிறை விஷயத்திலோ ஹதீசுக்கு மாற்றமாக, ஹதீஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அறிவியலை முன்னிறுத்துகின்றார்கள்.

மேலும் தொழுகை நேரத்தை ஆதாரமாகக் காட்டும் இவர்கள், சவூதியில் சூரியன்மறைந்தால் இங்கே மக்ரிப் தொழுவதில்லை. அந்தந்த பகுதியில் சூரியன் மறைந்தால்தான் மக்ரிப் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பிறை விஷயத்தில் மட்டும்அந்தந்த பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர்.

அது மட்டுமின்றி சூரியக் கணக்கைப் பொறுத்தவரை இந்த ஊரில், இந்தநேரத்தில்சூரியன் மறைகின்றது என்று கணித்தால் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தக் குழப்பமும்ஏற்படுவதில்லை. ஆனால் பிறைத் தோற்றத்தில் குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை.

பிறை விஷயத்தில் கணிப்பை எடுத்துக் கொண்டாலும் இவர்கள் கூறும்ஒரே பிறை,உலகப் பிறை சாத்தியமில்லை. ஏனெனில் கணிப்பிலும் மூன்று நிலைகள் உள்ளன.

1. சந்திரனை பூமி நேர்க்கோட்டில் சந்திக்கும் நிலைக்குத் தான்அமாவாசை என்று பெயர்.இவ்வாறு சந்தித்து ஒன்றை விட்டு ஒன்று விலகிய மறு நொடியில் அறிவியல்அடிப்படையில் பிறை பிறந்து விடுகின்றது. இதைத் தான் ஷியாக்கள் தலைப் பிறைஎன்று எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது அமாவாசை அன்றே தலைப்பிறை என்றுஷியாக்கள் கூறுகின்றனர்.

2. அமாவாசை விலகி உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் பிறை பிறக்கின்றயண்ள்ண்க்ஷப்ங் ஙர்ர்ய் என்ற கட்டம்.

3. நமது பகுதியில் இந்த நேரத்தில் தான் கண்களுக்குத் தெரியும் என்று கணிக்கப்படும்பிறை.

பிறை விஷயத்தில் இப்படி மூன்று கட்டங்கள் இருக்கின்றன. அதனால் இவற்றில் எதைஎடுத்துக் கொள்வது?என்ற குழப்பங்கள் இருக்கின்றன.இது போன்ற ஒரு குழப்பம் சூரியக்கணக்கில் இல்லை.

பிறை விஷயத்தில் மேற்கண்ட மூன்று விதமான கணிப்புகளில் எதை எடுத்துக்கொண்டாலும் அது ஹதீசுக்குஒத்தக் கருத்தாக அமையாது.

ஆனால் பிறை பார்த்து, தென்படாத பட்சத்தில் அந்த மாதத்தை முப்பது நாட்களாகப்பூர்த்தி செய்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் கட்டளையைச்செயல்படுத்தியதாக அமைந்து விடுகின்றது.

யூத, கிறித்தவர்களின் நடைமுறையைக் காப்பியடித்து பிறையைக் கணிப்பவர்கள், பிறைபார்க்க வேண்டும் என்று வருகின்ற அத்தனை ஹதீஸ்களையும் நிராகரிக்கின்றார்கள்.தெரிந்து கொண்டே நிர்தாட்சண்யமாகவும் முரண்டு பிடியாகவும் ஹதீஸ்களைத் தூக்கிஎறிகின்றார்கள். இவர்கள் தான் குர்ஆன், ஹதீஸை மதிப்பவர்களாம். ஸலபுஸ் ஸாலிஹீன்களைப் பின்பற்றுபவர்களாம்.

ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும், ஸலபுஸ்ஸாலிஹீன்களைப் பின்பற்றவேண்டும் என்று சவூதிச் சம்பளத்திற்காகத் தீர்மானம் போடும் இவர்கள் பிறைவிஷயத்தில் மட்டும் ஹதீஸ்களையும், ஸஹாபாக்களின் நடைமுறைகளையும் தூக்கிஎறிந்து விடுகின்றனர்.

யூத, கிறித்தவர்களைப் போன்று தங்களது நோன்பும், பெருநாளும் முன்கூட்டியேநிச்சயித்தபடி அமைய வேண்டும் என்று அவர்களது கலாச்சாரத்தைத் துணிந்துதிணிக்கும் பணியைப் பகிரங்கமாக மேற் கொள்கின்றார்கள். அதனால் தான் இவர்கள்கணிப்பு என்ற பெயரில் யூதக் கலாச்சாரத் திணிப்பை நடத்துகின்றார்கள் என்றுபகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம்.