முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?

ரஃபீக், நாகர்கோவில்

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர்.

حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن سعيد بن المسيب عن علي قال صنعت طعاما فدعوت النبي صلى الله عليه وسلم فجاء فدخل فرأى سترا فيه تصاوير فخرج وقال إن الملائكة لا تدخل بيتا فيه تصاوير

நஸயீ 5256

தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்த போது வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறி விட்டனர். உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டனர்.

ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை.

صحيح البخاري

1341 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الحَبَشَةِ يُقَالُ لَهَا: مَارِيَةُ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ، وَأُمّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَتَا أَرْضَ الحَبَشَةِ، فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا، فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: «أُولَئِكِ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّورَةَ أُولَئِكِ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ»

1341 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முஸலமா (ரலி),  உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும், அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1341

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவம் வரைந்த கிறித்தவர்களைத் தான் கண்டித்தனர். நீங்கள் ஏன் போனீர்கள் என்று தமது மனைவியரைக் கண்டிக்கவில்லை. அதன் அழகை வர்ணித்ததையும் கண்டிக்கவில்லை.

முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளில் சிலைகளோ, இன்ன பிற உருவங்களோ இருந்தால் அங்கே நாம் நுழைவது தவறில்லை. அவர்களின் வழிபாட்டுத்தலங்களைப் பார்வையிடுவதும் தவறல்ல.

11.03.2010. 23:40 PM

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit