ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?

ஏகத்துவம் 2005 மே

கேள்வி :

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமைஇருக்கின்றதா? மேலும் ளயீஃபானஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால்அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?

பி. அப்துர்ரஹ்மான் கோடம்பாக்கம்

பதில் :

ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அவர்களின்தரத்தை வைத்தே முடிவு செய்கிறோம். எனவே ஓர் அறிவிப்பாளர் பலவீனமானவர்என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை உள்ளதா? என்று கேட்பதே சரியானதாகும்.

அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை பொய்யர் என்று எல்லா அறிஞர்களும் ஒருமித்தகருத்தில் சிலரைப் பற்றி கூறியிருப்பார்கள். அல்லதுபலீவனமானவர் என்றுகூறியிருப்பார்கள்.

ஆனால் அதே சமயம் எல்லா அறிவிப்பாளர்களைப் பற்றியும் எல்லா அறிஞர்களிடமும்ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அறிவிப்பாளரின்தரம் என்பது, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றது.இவ்வாறு ஆராயும் போது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஒரு ஹதீஸ் கலைஅறிஞருக்குத் தெரிந்தசெய்தி மற்றவருக்குத் தெரியாமல் போகலாம். அல்லது அவரைவிட இவருக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். இது போன்ற காரணங்களால்ஒருஅறிவிப்பாளரைப் பற்றி இமாம்களிடத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகுறைவு.

பல ஹதீஸ் கலை அறிஞர்கள் ஓர் அறிவிப்பாளரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள்.ஒரே ஒருவர் மட்டும்அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்று கூறி அதற்குத் தக்கசான்றையும் கூறுகின்றார் என்றால் இந்த ஒருவரின் விமர்சனத்தையே நாம் ஏற்கவேண்டும். ஏனெனில் ஒருவரை நல்லவர் என்று கூறுபவர்களுக்கு அவரது குறையைப்பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை கூறுபவர் தக்க சான்றின்அடிப்படையில் கூறும் போது அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அவரைப்பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பான்மைஅடிப்படையிலோ, அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படும்விஷயமல்ல என்பதே இதற்குக் காரணம்.

பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால்அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டுள்ளீர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியசெய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகியஅனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன் 17:36)

உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்றுவிடு என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 2442

நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவதுதடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும் ஆதாரப் பூர்வமானஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றிஅமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit