வெள்ளிக்கிழமையில் தான் உலகம் அழிக்கப்படுமா?

வெள்ளிக்கிழமையில் தான் உலகம் அழிக்கப்படுமா?

ராஜா முஹம்மத் குவைத்

லக அழிவு வெள்ளிக்கிழமையன்று தான் நிகழும் என ஆதாரப்பூர்வமான நபிமொழி கூறுகின்றது.

1411 و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

நூல் : முஸ்லிம் (1548)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்தக் கேள்வியை உலகம் எப்போது அழியும் என்பதை அறிந்து கொள்வதற்காக நீங்கள் கேட்டிருந்தால் இதுவே அதற்குப் போதுமான பதிலாகும்.

ஆனால் சிலர் இந்தச் செய்தியில் இருந்து தவறான வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அதாவது உலகம் அழிவது வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் ஒரே கிழமை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது என்பது தான் அந்த வாதம்

இந்த வாதத்துக்கான பதில் பிறை ஓர் ஆய்வு எனும் நூலில்  உலகம் எப்போது அழியும் என்ற தலைப்பின் கீழ் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply