அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா?

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா?

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா?

– ஷாகுல் ஹமீது

பதில்:

முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஅபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

 
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

திருக்குர்ஆன் 3:96 

அனைத்து நபிமார்களும் கஅபத்துல்லாஹ்வில் தொழுகை நடத்தினார்களா என்று கேட்டுள்ளீர்கள். அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் மிஃராஜ் பயணத்தின் போது பைத்துல் முகத்தஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் தொழுகை நடத்தியதாகவும், அதில் அனைத்து நபிமார்களும் தொழுததாகவும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்

صحيح مسلم
172 ( 278 )   وحدثني  زهير بن حرب ، حدثنا  حجين بن المثنى ، حدثنا  عبد العزيز  – وهو ابن أبي سلمة – عن  عبد الله بن الفضل ، عن  أبي سلمة بن عبد الرحمن ، عن  أبي هريرة  قال : قال رسول الله صلى الله عليه وسلم :  " لقد رأيتني في الحجر وقريش تسألني عن مسراي، فسألتني عن أشياء من بيت المقدس، لم أثبتها، فكربت كربة ما كربت مثله قط. قال : فرفعه الله لي أنظر إليه ما يسألوني عن شيء إلا أنبأتهم به، وقد رأيتني في جماعة من الأنبياء، فإذا موسى قائم يصلي، فإذا رجل  ضرب   جعد ، كأنه من رجال شنوءة، وإذا عيسى ابن مريم عليه السلام قائم يصلي، أقرب الناس به شبها عروة بن مسعود الثقفي، وإذا إبراهيم عليه السلام قائم يصلي أشبه الناس به صاحبكم – يعني نفسه – فحانت الصلاة، فأممتهم، فلما فرغت من الصلاة. قال قائل : يا محمد، هذا مالك صاحب النار، فسلم عليه، فالتفت إليه، فبدأني بالسلام ". 

 
அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், "முஹம்மதே! இதோ மாலிக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்'' என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதலில் எனக்கு (ஸலாம்) சொல்லி விட்டார்.

நூல் : முஸ்லிம் 251

Leave a Reply