கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

ன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா?

ஷர்மிளா பர்வீன்

பதில் : 

நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 309, 310

பெண்கள் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. கன்னிப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடர முடியாது. ஏனெனில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் பள்ளிவாசலுக்குச் செல்வதற்குத் தடை உள்ளது. இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து அறியலாம்.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.

அல்குர்ஆன்4:43


கேள்வி-பதில்- ஏகத்துவம்,ஜனவரி 2005