ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா?

ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா?

முஹம்மத் கதாபி

பதில்:

ஜின்களுக்குத் தனி உலகம் இருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிந்தித்தால் இது தவறான கருத்து என்பதை அறியலாம்.

மனிதர்கள் வாழும் பூமியில் தான் ஜின்கள் வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக் கணவாய்களில் தங்கி இருக்கின்றன.

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 55:33

பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள் என ஜின்களைப் பார்த்துக் கூறுவதாக இருந்தால் ஜின்கள் இந்தப் பூமியில் வசித்தாலே இவ்வாறு கூற முடியும்.

صحيح البخاري
3860   حدثنا  موسى بن إسماعيل ، حدثنا  عمرو بن يحيى بن سعيد ، قال : أخبرني  جدي ، عن  أبي هريرة  رضي الله عنه،  أنه كان يحمل مع النبي صلى الله عليه وسلم إداوة لوضوئه وحاجته، فبينما هو يتبعه بها، فقال : " من هذا ؟ " فقال : أنا أبو هريرة. فقال : "  ابغني  أحجارا  أستنفض  بها، ولا تأتني بعظم، ولا بروثة ". فأتيته بأحجار أحملها في طرف ثوبي حتى وضعت إلى جنبه، ثم انصرفت، حتى إذا فرغ مشيت، فقلت : ما بال العظم، والروثة ؟ قال : " هما من طعام الجن، وإنه أتاني وفد جن نصيبين ونعم الجن، فسألوني الزاد، فدعوت الله لهم أن لا يمروا بعظم، ولا بروثة إلا وجدوا عليها طعاما ".
 

மேலும் பின்வரும் செய்திகளும் ஜின்கள் பூமியில் இருக்கின்றன என்று கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3860

ஜின்கள் பூமியில் தான் வசிக்கின்றன என்பதை இந்த ஹதீஸில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply