ஏகத்துவம் 2005 மே
கேள்வி :
நான் எகிப்துவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஜின்களைப் பற்றி கேள்விகேட்கும் போது, அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஒப்பந்தம் செய்யலாம். அவ்வாறு ஒப்பந்தம் செய்வதற்கு மார்க்கத்திற்கு விரோதமான சில காரியங்களைச்செய்ய வேண்டும். அவ்வாறு யார் செய்கின்றாரோ அவர்காஃபிர் ஆகி விடுவார். அதைவைத்துத் தான் சிலர் பிளாக் மேஜிக் செய்கின்றார்கள் என்று கூறினார். எனவே ஜின்கள்குறித்து இஸ்லாம்என்ன சொல்கின்றது? அவற்றுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா?என்பதைவிளக்கவும்
கே.பி. ஷேக் முஹம்மத், அபூதாபி
பதில் :
மனித இனத்தைப் போலவே பகுத்தறிவுவழங்கப்பட்ட இனம் ஜின் இனமாகும். ஆனால்அதே சமயம், ஜின்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத, மனித இனத்தை விடபன்மடங்கு ஆற்றலுடைய ஒரு படைப்பாகும்.
நெருப்பால் படைக்கப்பட்ட இந்த ஜின்களின் இனத்தைச் சேர்ந்தவன் தான்ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ்.
மனித இனத்தைப் போலவே ஜின் இனத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள்போன்றோர்உள்ளனர். அவர்களுக்கும் சொர்க்கம், நரகம் உண்டு.
இவை ஜின் இனத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் செய்திகளாகும். இப்போது தங்கள்கேள்விக்கு வருவோம்.
ஜின் இனத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஒப்புக் கொள்ளும் அந்த அறிஞர்அதனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றார் என்கிறீர்கள். கட்டுப்படுத்துவதற்கும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.நாம் செய்யும் ஒப்பந்தத்திற்கு ஜின் கட்டுப்படுகின்றது என்றால் நமக்குக்கட்டுப்படுகின்றது என்று தான் அர்த்தம். வார்த்தை தான் வேறே தவிரஅர்த்தம் ஒன்றுதான்.
ஜின்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்?இவற்றை யார் கற்றுத் தந்தார்கள்? அதைச் செய்தால் காஃபிராகி விடுவார் என்பதற்குஎன்ன ஆதாரம்? என்பதையெல்லாம் அந்த அறிஞர் தான் விளக்க வேண்டும். குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் ஜின்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்என்பதற்கு எந்தஆதாரமும் இல்லை.பிளாக் மேஜிக் என்பது கண் கட்டு வித்தை தானே தவிர,ஜின்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
ஜின் இனத்தை மனிதர்கள் கட்டுப்படுத்தவோ, அதனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவோமுடியாது என்பது தான் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து நாம் பெறும்தீர்ப்பாகும்.
ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும்,விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் 38:37,38
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.அது நாம்பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொருபொருளையும் அறிவோராக இருக்கிறோம். ஷைத்தான்களில்அவருக்காகமுத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்)கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.
(அல்குர்ஆன் 21:80,81)
இந்த வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் சுலைமான் நபிக்கு ஜின்னைவசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இது சுலைமான் நபிக்கு மட்டுமேஉரிய சிறப்பு என்றும் மனித சமுதாயத்தில் வேறு யாருக்கும் ஜின்களைக் கட்டுப்படுத்தும்இந்தச் சிறப்பு கிடையாது என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ்தெரிவிக்கின்றது.
"இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன்னே தோன்றி என் தொழுகையைக் கெடுக்கமுயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான்.காலையில் நீங்கள்அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலில்உள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். "இறைவா! எனக்குப் பின் வேறுஎவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக'' (38:35) என்று என்சகோதரர் சுலைமான் அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்ததால் அதைவிரட்டி அடித்து விட்டேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 461, 1210
ஜின்களைக் கட்டுப்படுத்தி, அவற்றை வேலை வாங்கும் அதிகாரம் சுலைமான் நபியைத்தவிர வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதை இந்தஹதீஸ் தெளிவாகஉணர்த்துகின்றது.
எனவே ஜின்களுடன் ஒப்பந்தம் செய்து அவற்றைக் கொண்டு வேலை வாங்க முடியும்என்பது கட்டுக்கதை என்பதில் சந்தேகமில்லை.
ஜின்களைக் கட்டுப்படுத்தி, அல்லது ஒப்பந்தம் செய்து வைத்திருப்பது உண்மை என்றால்,ஜின்கள் எந்தக் காரியத்தைச் செய்யும் என்றுஅல்லாஹ் கூறுகின்றானோ அதைச் செய்துகாட்ட வேண்டும்.
"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளதுசிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்)கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள்எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான்கொண்டு வருகிறேன். நான்நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத்என்ற ஜின் கூறியது.
"கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன்'' என்றுவேதத்தைப் பற்றிய ஞானம்பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர்கண்டதும், "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்றுஎன்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர்தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன்தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்" (என்று சுலைமான் கூறினார்)
(அல்குர்ஆன் 27:38-40)
கண் மூடித் திறப்பதற்குள் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின்சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக அல்லாஹ்இந்த வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான். இதை அபார சக்தி என்று கூறலாம்.
இதன் அடிப்படையில் ஜார்ஜ் புஷ்ஷை, அவரது நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வாஎன்று கட்டளையிட்டு, அதை அந்த ஜின்கள் கொண்டு வந்தன என்றால் அவர் கூறுவதைநம்பலாம். அப்படி செய்து காட்டாத வரை புளுகுகின்றார்கள் என்று தான் அர்த்தம்.