ஜியாரத் என்பது உயிருள்ளவரை சந்திப்பதைத் தான் குறிக்குமா?

ஜியாரத் என்பது உயிருள்ளவரை சந்திப்பதைத் தான் குறிக்குமா?

டக்கத்தலம் சென்று ஜியாரத் செய்வது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட சுன்னத் ஆகும். இறந்தவர்கள் செவியுறுவார்கள்; உதவுவார்கள் என்பதற்கு இதையும் தீய கொள்கை உடையோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள். இது உயிருள்ளவர்களைச் சந்திப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே மரணித்தவர்கள் உயிருடன் உள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது என்பது தீய கொள்கையுடையவர்களின் வாதம்.

ஜியாரத் என்ற சொல் உயிருள்ளவற்றைச் சந்திப்பதற்கும், உயிரற்றவைகளைச் சந்திப்பதற்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.

3455 – حدثنا أبو جعفر أحمد بن منيع حدثنا إسماعيل بن إبراهيم حدثنا أيوب عن نافع عن ابن عمر أن رسول الله -صلى الله عليه وسلم- كان يزور قباء راكبا وماشيا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தும், வாகனத்திலும் சென்று குபா பள்ளிவாசலை ஜியாரத் செய்வார்கள்.

நூல் : முஸ்லிம் 2702 

குபா என்பது அடக்கத்தலம் அல்ல. நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஊருக்குள்  நுழைவதற்கு முன் ஊரின் எல்லையில் இருந்த குபாவில் சில நாட்கள் தங்கினார்கள். அப்போது அங்கே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப் பள்ளியை அவர்கள் அடிக்கடி ஜியாரத் செய்வார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. உயிர் இல்லாத பள்ளிவாசலுக்குச் சென்றது ஜியாரத் என்ற வார்த்தையால் சொல்லப்படுகிறது.

وقال أبو الزبير: عن عائشة، وابن عباس  رضي الله عنهم،: «أخر النبي صلى الله عليه وسلم الزيارة إلى الليل» ويذكر عن أبي حسان، عن ابن عباس رضي الله عنهما، «أن النبي صلى الله عليه وسلم كان يزور البيت أيام منى»

மினாவில் தங்கும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தை ஜியாரத் செய்வார்கள்.

நூல் : புகாரி 

உயிர் இல்லாத கஅபா ஆலயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றதைப் பற்றி குறிப்பிடும் போது ஜியாரத் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளனர்.

எனவே ஜியாரத் என்ற சொல்லை வைத்து மண்ணறையில் உள்ளவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று வாதிடுவது அறியாமையாகும்.

ஜியாரத் செய்வது அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் நமது தேவைகளைக் கூறி வேண்டுதல் செய்வதற்காக சுன்னத்தாக ஆக்கப்படவில்லை. இரண்டு நோக்கங்களுக்காகவே ஜியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

நாமும் மரணிக்கவுள்ளோம் என்ற எண்ணம் அடக்கத்தலம் செல்லும் போது உறுதிப்படும். இதனால் மறுமையைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும் என்பது முதல் காரணம்.

மரணித்தவர்கள் எந்த நல்லறமும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர். அல்லாஹ்விடம் துஆச் செய்யக் கூட முடியாத நிலையில் உள்ளனர். உயிருடன் உள்ள நாம் தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய முடியும். எனவே அடக்கத்தலம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்தபடி அவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்பது ஜியாரத்துக்கான இரண்டாவது காரணம்.

இந்தக் காரணங்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மரணித்தவர்கள் மிகவும் பலவீன நிலையில் உள்ளதால் நாம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, உயிருடன் உள்ளவர்களை விட அவர்கள் அதிக ஆற்றலுடன் உள்ளனர் என்று தலைகீழாக மாற்றிவிட்டனர்.

இதற்குப் பின்வரும் நபிமொழிகள் ஆதாரமாக உள்ளன.

سنن الترمذي
1054   حدثنا  محمد بن بشار ،  ومحمود بن غيلان ،  والحسن بن علي الخلال ، قالوا : حدثنا  أبو عاصم النبيل ، قال : حدثنا  سفيان ، عن  علقمة بن مرثد ، عن  سليمان بن بريدة ، عن  أبيه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  " قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد في زيارة قبر أمه، فزوروها ؛ فإنها تذكر الآخرة "

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974) 

மறுமையை நினைவூட்டுவதுதான் சியாரத்தின் நோக்கம் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

(2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ:حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَلَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ: «السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً.مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ» وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ «وَأَتَاكُمْ».

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) "பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அ(த்)தா(க்)கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது (மரணம்) உங்களிடம் வந்து விட்டது. நாளை (இறுதித் தீர்ப்புக்கு) தவனை கொடுக்கப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பாயாக!

நூல் : முஸ்லிம் 1773 

இந்த ஹதீஸில் கூறப்பட்ட துஆவும், ஜியாரத் செய்யும் போது கூறுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த மற்ற அனைத்து துஆக்களும் மரணித்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் பாவமன்னிப்புத் தேடும் வகையில் தான் அமைந்துள்ளன.

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

1622 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِيوَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1777 

ஜியாரத் என்பது இறந்தவர்களின் அருளையும், ஆசியையும் நாம் பெறுவதற்கு அல்ல. மாறாக மரணத்தை நினைவு கூரவும், அனைத்து ஆற்றலையும் இழந்து விட்ட மரணித்தவர்களுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கும் தான் ஜியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறியலாம். 

Leave a Reply