தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு

ஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை.

பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

பெற்ற பிள்ளைகளின் கபடத்தை இறைத்தூதரான யாகூப் நபியால் அறிய முடியவில்லை என்றால் என்றோ அடக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து சொல்லப்படும் கதைகளை நம்பி அவ்லியா பட்டம் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதா?

ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து நல்லவர், கெட்டவர் என்று நம்மளவில் கூறிக்கொன்டாலும் அவர்கள் உண்மையில் நல்லடியார்கள் என்று  தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

Leave a Reply