திருமண நாள் கொண்டாடலாமா?

திருமண நாள் கொண்டாடலாமா?

திருமண நாளில் சந்தோஷமாக மற்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழலாமா? புது ஆடை அணியலாமா?

ஆர்.ஷம்சுல்ஹுதா, பெரம்பலூர்.

பதில் :

பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இது போன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று மதத்தவர்கள் செய்து வருவதால் அதை முஸ்லிம்கள் செய்யக் கூடாது.

سنن أبي داود

4031 – حدَّثنا عثمانُ بنُ أبي شيبةَ، حدَّثنا أبو النضرِ، حدَّثنا عبدُ الرحمن ابنُ ثابتٍ، حدَّثنا حسانُ بنُ عطيَّهَ، عن أبي مُنيب الجُرَشيٍّ عن ابنِ عُمَرَ، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -:، مَن تَشَبَّه بقومٍ فهو منهم"

யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சார்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவூத்

மேலும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடும் போது அது அவசியம் கொண்டாடியாக வேண்டிய ஒன்று என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கும். வசதி இல்லாதவர்களும் இதைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இது ஏற்படுத்தும் பின்விளைவுகளைக் கருதியும் இதைத் தவிர்த்தாக வேண்டும்.

20.12.2014. 20:42 PM

Leave a Reply