நோன்பை தாமதமாக துறத்தல் சரியா?

நோன்பை தாமதமாக துறத்தல் சரியா?

நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் நோன்பு துறக்கும் நேர அட்டவனைகளில் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

பதில்:

சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று கணித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி வருகின்றது. அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் வேறுபடுமே தவிர ஒரே ஊருக்கு இரண்டு விதமான நேரத்தை யாரும் கணிப்பதில்லை.

حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي حازم عن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر

நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.