பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

ரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பதில்:

மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது வாழ்ந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

صحيح مسلم (3/ 45)

2203 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ ح وَحَدَّثَنِى إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ حَدَّثَنَا أَبَانٌ حَدَّثَنَا يَحْيَى أَنَّ زَيْدًا حَدَّثَهُ أَنَّ أَبَا سَلاَّمٍ حَدَّثَهُ أَنَّ أَبَا مَالِكٍ الأَشْعَرِىَّ حَدَّثَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « أَرْبَعٌ فِى أُمَّتِى مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لاَ يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِى الأَحْسَابِ وَالطَّعْنُ فِى الأَنْسَابِ وَالاِسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ »

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிட மாட்டார்கள்.

அவைகளாவன:

  • குலப்பெருமை பாராட்டுவது,
  • (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறை கூறுவது,
  • கிரகங்களால் மழை பொழியும் என நம்புவது
  • ஒப்பாரிவைத்து அழுவது

அறிவிப்பவர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 1700

4250حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ قَالَ حَدَّثَنِي أَبِي حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ الْحَجَّاجِ عَنْ قَتَادَةَ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் யாரும் யாரிடத்திலும் பெருமையடிக்கக் கூடாது. நீங்கள் யாரிடத்திலும் வரம்பு மீறாமல் பணிவாக நடக்க வேண்டும் என அல்லாஹ் எனக்கு அறிவித்துள்ளான்.

நூல் : அபூதாவுத் 4250

4452حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ حَدَّثَنَا الْمُعَافَي ح و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ وَهَذَا حَدِيثُهُ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ أَنْتُمْ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ لَيَدَعَنَّ رِجَالٌ فَخْرَهُمْ بِأَقْوَامٍ إِنَّمَا هُمْ فَحْمٌ مِنْ فَحْمِ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنْ الْجِعْلَانِ الَّتِي تَدْفَعُ بِأَنْفِهَا النَّتِنَ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அறியாமைக் காலத்திலிருந்த ஆணவத்தையும், முன்னோர்களின் மூலம் பெருமையடிப்பதையும் அல்லாஹ் அழித்து விட்டான். இறைபக்தியுள்ள இறை நம்பிக்கையாளன், பாவம்புரிந்த துர்பாக்கியவான் (என மனிதர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர்). நீங்கள் (அனைவரும்) ஆதமுடைய மக்கள். ஆதம் மண்ணால் (படைக்கப்பட்டவர்).  முன்னோர்களைக் கொண்டு பெருமையடிப்பவர்கள் அதை விடவேண்டும். (இறை மறுப்பாளர்களாக இறந்த) அவர்கள் நரகின் கொள்ளிகளாவர். தனது மூக்கால் அசுத்தத்தை தள்ளிச் செல்லும் மலமுருட்டும் வண்டை விடவும் அவர்கள் அல்லாஹ்விடத்தில் இழிவானவர்களாக இருப்பர்.

நூல் : அபூதாவுத் 4452

குலப் பெருமை முளைவிடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார்கள். பின்வரும் சம்பவங்கள் இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்கு எள்ளவு கூட அனுமதியில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

3829حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ قَالَتْ بِنْتُ يَهُودِيٍّ فَبَكَتْ فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ فَقَالَتْ قَالَتْ لِي حَفْصَةُ إِنِّي بِنْتُ يَهُودِيٍّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ ثُمَّ قَالَ اتَّقِي اللَّهَ يَا حَفْصَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யூதனின் மகள் என ஹஃப்ஸா (ரலி) கூறினார்கள். இந்தச் செய்தி ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்குக் கிடைத்தபோது அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் அழுதுகொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ஏன் அழுகிறாய்? என வினவினார்கள். நான் யூதனின் மகள் என ஹஃப்ஸா கூறிவிட்டார் என ஸஃபிய்யா (ரலி) தெரிவித்தார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ நபியின் மகள் தான். உன்னுடைய சிறிய தந்தையும் நபியாவார். நீ நபியின் மனைவியாக இருக்கின்றாய். பிறகு எப்படி ஹஃப்ஸா உன்னிடத்தில் பெருமையடிக்க முடியும்? என்று கூறினார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஹஃப்ஸாவே நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்று எச்சரித்தார்கள்.

நூல் : அபூதாவுத் 3829

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடைத்தார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைத்தார்கள்.

صحيح البخاري رقم فتح الباري (5/ 23)
3730 – حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعْثًا، وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ فَطَعَنَ بَعْضُ النَّاسِ فِي إِمَارَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ تَطْعُنُوا فِي إِمَارَتِهِ، فَقَدْ كُنْتُمْ تَطْعُنُونَ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلْإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 3730

குலப்பெருமையால் எந்த ஒரு நன்மையுமில்லை. அது மனிதனின் பெற்றிக்கு உதவாது. எனவே அது தேவையற்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

நூல் : முஸ்லிம் 5231

"பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

Leave a Reply