மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்?

மண்ணறை வேதனைக்கு உரியவர்கள் யார்?

அன்சாரி

பதில்

ப்ரில் மனிதர்களின் கொள்கை தொடர்பாக குறிப்பிட்ட சில கேள்விகள் மாத்திரமே கேட்கப்படும். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இக்கேள்விகளுக்குப் பதில் கூறிவிடுவார். இதன் பின் இவர் அமைதியாக உறங்கி விடுவார்.

இவர் உலகில் வாழும் போது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பாவங்கள் எத்தனை செய்தாலும் இவற்றுக்கு கப்ரில் தண்டனை தரப்படாது. மறுமை நாளில் தான் இதற்கான விசாரணை நடைபெறும்.

ஆனால் மரணித்தவர் இறை மறுப்பாளராக இருந்தால் கப்ரில் கேட்கப்படும் இஸ்லாமியக் கொள்கை தொடர்பான கேள்விகளுக்கு இவரால் பதிலளிக்க முடியாது. இதற்காக இவருக்கு தண்டனை தரப்படும்.

صحيح البخاري
1338   حدثنا  عياش ، حدثنا  عبد الأعلى ، حدثنا  سعيد ، قال : وقال لي  خليفة  : حدثنا  ابن زريع ، حدثنا  سعيد ، عن  قتادة ، عن  أنس  رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :  " العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه، حتى إنه ليسمع  قرع نعالهم ، أتاه ملكان فأقعداه فيقولان له : ما كنت تقول في هذا الرجل – محمد صلى الله عليه وسلم – ؟ فيقول : أشهد أنه عبد الله ورسوله، فيقال : انظر إلى مقعدك من النار، أبدلك الله به مقعدا من الجنة ". قال النبي صلى الله عليه وسلم : " فيراهما جميعا، وأما الكافر أو المنافق فيقول : لا أدري، كنت أقول ما يقول الناس. فيقال : لا دريت  ولا تليت . ثم يضرب بمطرقة من حديد ضربة بين أذنيه، فيصيح صيحة يسمعها من يليه إلا  الثقلين  ". 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “"எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்'' என்பான்.  அப்போது அவனிடம் "நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 1338

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தொடர்ந்து மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

صحيح مسلم
2869 ( 69 )   حدثنا  أبو بكر بن أبي شيبة ، حدثنا  وكيع  ح وحدثنا  عبيد الله بن معاذ ، حدثنا  أبي  ح وحدثنا  محمد بن المثنى ،  وابن بشار ، قالا : حدثنا  محمد بن جعفر ، كلهم عن  شعبة ، عن  عون بن أبي جحيفة  ح وحدثني  زهير بن حرب ،  ومحمد بن المثنى ،  وابن بشار ، جميعا عن  يحيى القطان  – واللفظ لزهير – حدثنا  يحيى بن سعيد ، حدثنا  شعبة ، حدثني  عون بن أبي جحيفة ، عن  أبيه ، عن  البراء ، عن  أبي أيوب ، قال :  خرج رسول الله صلى الله عليه وسلم بعدما غربت الشمس، فسمع صوتا، فقال : " يهود تعذب في قبورها ". 

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)

நூல் : முஸ்லிம் 5504

சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமை, மலம் ஜலம் கழிக்கும் போது மறைவிடத்தை மறைக்காமை, புறம் பேசுதல் ஆகிய குறிப்பிட்ட பாவங்களுக்காக அப்பாவங்களைச் செய்தவர்கள் கப்றில் தண்டிக்கப்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இந்தப் பாவங்களுக்கு மட்டும் கப்ரில் பிரத்யேகமாக தண்டனை தரப்படும்.

صحيح البخاري
1361   حدثنا  يحيى ، حدثنا  أبو معاوية ، عن  الأعمش ، عن  مجاهد ، عن  طاوس ، عن  ابن عباس  رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم  أنه مر بقبرين يعذبان، فقال : " إنهما ليعذبان، وما يعذبان في  كبير  : أما أحدهما فكان لا يستتر من البول، وأما الآخر فكان يمشي بالنميمة ". ثم أخذ جريدة رطبة فشقها بنصفين ثم غرز في كل قبر واحدة، فقالوا : يا رسول الله، لم صنعت هذا ؟ فقال : " لعله أن يخفف عنهما ما لم ييبسا ". 

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்ருகளைக் கடந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்ற போது, "இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்''  எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?''  என்று கேட்டதும்,  "இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1361

سنن ابن ماجه
348   حدثنا  أبو بكر بن أبي شيبة ، قال : حدثنا  عفان ، قال : حدثنا  أبو عوانة ، عن  الأعمش ، عن  أبي صالح ، عن  أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  " أكثر عذاب القبر من البول ".  حكم الحديث:  صحيح

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதைனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : இப்னு மாஜா 342

Leave a Reply