மத்ஹபு இமாம்களின் பிறப்பு மற்றும் இறப்பு விபரம்:
மத்ஹபு இமாம்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களது வழிகாட்டுதல்கள் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதல்களுக்கு எதிராக இருந்தாலும் மத்ஹபு இமாம்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்று உளறி வருகின்றனர். வகுக்கப்பட்டுள்ள மத்ஹபு சட்டங்கள் எல்லாம் ஏதோ நபிகளாரின் நேரடி கட்டளைகளை கேட்டு அப்படியே அதைப் பின்பற்றி எழுதப்பட்டது போல பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
நபிகளார் மரணித்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான்கு முக்கிய மத்ஹபுகளின் இமாம்களும் பிறந்துள்ளனர். அவர்கள் பிறந்த மற்றும் இறந்த காலங்களை தெரிந்து கொள்வது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இமாம்களின் காலம்
அபூ ஹனீஃபா ஹிஜிரி 80 முதல் ஹிஜிரி 150 வரை
இமாம் ஷாஃபி ஹிஜிரி 150 முதல் ஹிஜிரி 204 வரை
இமாம் மாலிக் ஹிஜிரி 93 முதல் ஹிஜிரி 179 வரை
இமாம் அஹ்மது ஹிஜிரி 164 முதல் ஹிஜிரி 241 வரை
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் தற்போது மத்ஹபு சட்ட நூல்கள் என்று இவர்கள் வைத்துள்ள ஆபாசக் களஞ்சிய நூல்களுக்கும் மத்ஹபு இமாம்களுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லை என்பதுதான் முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.