மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

தனது மனைவியிடம் சந்தோசமாக இருப்பதற்கு தனது தாயார் எப்போதும் இடையூறாக இருக்கிறார். தனது தாயாரைக் கண்டித்தால் தான் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த நிலையில் தாயாரைத் திட்டலாமா? என்று எனது நண்பர் கேட்கிறார்.

ஹக்கீம் சேட், துபை, யு.ஏ.இ.

பதில்:

மனைவியுடன் சேர்வதற்கு பெற்றோர் தடையாக இருந்தால் அப்போது அது தவறு என்று பெற்றோருக்கு ஆலோசனை கூறலாம்.

மனைவியைக் கவனிக்கக் கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டால் அதை மீறலாம்.

ஆனால் தாயாரைத் திட்டினால் தான் மனைவி திருப்தி அடைவாள் என்பதற்காக தாயைத் திட்டுவது பெரும் பாவமாகும்.

யாரைக் கண்டிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தவறு இருந்தால் மட்டுமே கண்டிக்க வேண்டும். அவர்களிடம் தவறு இல்லாத போது கண்டிப்பது பெரும்பாவமாகும்.

மேலும் மனிதன் தனது தாயாருக்கு கடமைப்பட்ட அளவுக்கு யாருக்கும் கடமைப்படவில்லை. எனவே மனைவிக்காக தாயாரைக் கண்டித்து நரகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்!

19.04.2011. 6:54 AM

Leave a Reply