மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?

ரியாஸ்

பதில் : மார்க்கத்தில் இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் உடல் ரீதியாக இதில் பிரச்சனை இருப்பவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

சில பெண்களின் கர்ப்பப்பைகள் பலவீனமாக இருக்கும். சின்ன அசைவுகளும் கருவைக் கலைத்து விடக்கூடும். இவ்வாறு குறைந்த சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். கரு உறுதிப்பட சில மாதங்கள் ஆகலாம். அதன் பின்னர் உடலுறவு கொண்டால் கருவுக்குப் பாதிப்பு ஏற்படாது. இது போன்ற நிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இருந்தால் உடலுறவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அது போல் சில உடலுறவு முறைகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படலாம். அது குறித்து சரியாக அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். கருவுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

பார்க்க : திருக்குர்ஆன் 2:195

27.10.2011. 14:07 PM

Leave a Reply