மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்பவம் உண்மையா?

மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்பவம் உண்மையா?

மிஃராஜ் பயணத்தில் எல்லா நபிமார்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இமாமாக தொழுகை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் குர்ஆனில் இப்ராஹீமை மனித குலத்துக்கு இமாமாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியனால் இப்ராஹீம் நபி தானே இமாமத் செய்ய வேண்டும்? இரண்டும் முரண்படுகிறதே?

பதில்

இப்ராஹீம் (அலை) அவர்களை மக்களுக்குத் தலைவராக அல்லாஹ் ஆக்கினான் என்பதற்கும், விண்ணுலகப் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் தலைமை தாங்கி தொழுவித்தார்கள் என்பதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ(124) 2

 
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மக்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:124

இப்ராஹீம் (அலை) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அப்போதிருந்த மக்களுக்கு அவர்கள் தலைவர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது. எனது வழிதோன்றல்களிலும் தலைவர்களை ஏற்படுத்துவாயாக என்று அவர்கள் கேட்ட பிரார்த்தனை இதைத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கிய தலைமைத்துவம் என்பது மக்களை நிர்வகிக்கும் ஆட்சி அதிகாரமாகும். தலைமை தாங்கி தொழவைக்கும் பொறுப்பல்ல.

Leave a Reply