மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்

மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்

யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இது பற்றி பீஜே தனது தமிழாக்கத்தில் விளக்கியுள்ளார்.

பார்க்க

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

பெரிய திமிங்கலத்தின் வயிற்றில் மனிதனால் உயிருடன் இருக்க முடியும் என்பதை இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழ் ஏப்ரல் 6-2016 அன்று பின் வரும் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் (வயது 56) மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் செய்த புகாரினால் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.

ஆனால் மூன்று நாட்களுக்குப் பின் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய ராட்சதத் திமிங்கிலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். 72 மணி நேரம் தான் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரையும் உயிருடன் இருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. திமிங்கிலத்தின் வயிற்றில் நல்ல குளிரிலும், கடும் இருட்டிலும் நான் இருந்தேன். எனது நீர்புகா கைக் கடிகாரத்தின் (waterproof watch) ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத் தான் சாப்பிட்டேன். அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை அது இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால் தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம் தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார். நான் நம்பிக்கையைக் கைவிடாமல் கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தேன். இப்போது நான் மீண்டு உயிருடன் வந்துள்ளேன் என்று கூறினார்.

05.04.2016. 21:20 PM

Leave a Reply