ஏகத்துவம் நவம்பர் 2006
விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள்
"சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர் களுக்குப் பாரமான தொழுகைவேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்)தொழுவதில்உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்துவிடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர்ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்குவராமல் இருந்தால்அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்” என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 657
என்ற இந்த ஹதீஸ் அதிகாலை மற்றும் இஷா தொழுகைகளில் அலட்சியம் காட்டுவதுநய வஞ்சகர்களின் அடையாளம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் ஒரு நல்லமுஸ்லிம்இவ்விரு தொழுகைகளில் அலட்சியம்காட்டுவது கிடையாது.
அதிலும் குறிப்பாக மழை மற்றும் பனி போன்ற கடுமையான குளிர் காலங்களில்காலையில் எழுவதற்கும், குளிர்ந்த தண்ணீரில் கை, கால் அலம்புவதற்கும், கடமையானகுளிப்பைநிறைவேற்றுவதற்கும் சிரமமாக இருந்தாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு, உண்மையான, நல்ல முஸ்லிம்கள் இந்தத் தொழுகைகளை நிறைவேற்றிவருகின்றனர்.
இப்படிப்பட்ட கனமான தொழுகையான சுப்ஹு தொழுகை, நம்மிடம் நிழலிட்டுக்கொண்டிருந்த ரமளான் மாதத்தில் அதிகமான மக்களைக் கவர்ந்து இழுத்தது. ஜும்ஆவைவிட அதிகமான மக்களை ரமளானின் சுப்ஹு தொழுகை தன்னகத்தே கொண்டு வரலாறுபடைத்தது.
இதற்கே இத்தனை கூட்டம் என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றிச்சொல்லவேண்டியதே இல்லை. இவ்வாறுஎல்லா நேரத் தொழுகை களிலும் இரவுத்தொழுகைகளிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் இறையில்லங்களில் எப்படி நிறைந்து வழிந்தனர்?இது உண்மையில் திருக்குர்ஆனின் ஈர்ப்பு சக்தி தான். அப்பப்பா? பள்ளிகளில் தான்எத்தனை புதுமுகங்கள்! புதுப் பொழிவுகள்! ஊருக்குள் இருப்பவர்கள்,ஊருக்கு அப்பால்இருப்பவர்கள் என அத்தனை பேரையும் பள்ளிக்குள் பார்க்க முடிந்தது.
இந்தத் திருக்குர்ஆன் மக்களை தொழுகையின் பால் இழுத்துக் கொண்டுவந்தது போலவேதர்மங்களின் பக்கமும் இழுத்துக் கொண்டு வந்தது.
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே மிகப் பெரும் கொடை வள்ளலாய் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள்.ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்)அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனைஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக)நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் வள்ளலாகத்திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6
இந்த ஹதீஸில் கூறப்படுவது போன்றே இஸ்லாமிய மக்களும் ரமளானில் ஆகிவிடுகின்றனர். அள்ளி அள்ளி வழங்குகின்றனர். அல்லாஹ்வின் அருளை அள்ளிப் பெற்றுவிடுகின்றனர்.இஸ்லாமிய மக்களை இப்படி ஒரு தர்ம சிந்தனையின் பக்கம் கொண்டுவந்தது எது? இந்தக் குர்ஆன் தானே!
உலகத்தில் வேதங்கள் என்று சொல்லப்படுபவை எத்தனையோ உள்ளன.அவையெல்லாம் மக்களை விட்டு விலகி விட்டன. மக்களும் அவற்றை விட்டு விலகிவிட்டனர். ஆனால் உண்மை வேதமான இந்தக் குர்ஆன் மட்டும் மக்களை விட்டுப்பிரியவில்லை. மக்களும் இந்த வேதத்துடன் தொடர்பிலிருக்கிறார்கள். அதற்குத்திருக்குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதம் சிறந்த எடுத்துக்காட்டு.
உண்மையில் இவ்வேதம் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் இருதயத்தைப் போன்றுசெயல்படுகின்றது. உடலில் ஓடுகின்ற மொத்த இரத்தத்தையும் தனக்குள் இழுத்து, சுத்தம் செய்துஅனுப்பும் இருதயத்தைப் போன்று, திருக்குர்ஆன் உலக முஸ்லிம்களை ரமளானில் தன்பக்கம் இழுத்து, சுத்தப்படுத்தி அனுப்பி விடுகின்றது.
"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல்விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சல் கண்டுவிடுகின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011
இந்த ஹதீஸில் வருவது போன்று இஸ்லாமிய சமுதாயம் என்பது ஓர் உடலைப்போன்றது. அதன் இருதயமாக திருக்குர்ஆன் விளங்குகின்றது. இந்தஇருதயம்ஆண்டுக்கொரு முறை அழைத்து துப்புரவுப்படுத்தி அனுப்புகின்றது.
அது தன்னிடம் வருகின்ற மக்களிடம் ஒரு செய்தியையும் சொல்லி அனுப்புகின்றது.
"ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன.நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான் கள்விலங்கிடப்படுகின்றார்கள்”என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
"உனக்கு அல்லாஹ் சுவனத்தைத் திறந்து வைத்து, நரகத்தை மூடி வைத்திருக்கின்றான்;ஷைத்தான்களை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளான்; சமுதாயத்தின் ஓர்உறுப்பாகியநீ ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டு நரகத்திற்குச் செல்லாமல்அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு சுவனத்திற்குள் வந்து விடு! சமுதாயத்தின் ஓர்அங்கமாகிய நீ திருந்துவதன் மூலம் இந்தச் சமுதாயம் சீர் பெற்று, உனது உலகவாழ்க்கையும், மறுமை வாழ்க்கையும் சீராகி விடுகின்றது! நான் இறங்கிய ரமளான்மாதத்தில் எந்த அல்லாஹ்வைப் பயந்து நீ வாழ்ந்தாயோ அதே அல்லாஹ்வைஎன்றென்றும் பயந்து வாழ்! இதுவே நான் இறங்கிய ரமளான் மாதம்விடும் செய்தியாகும்”என்று சிம்பாலிக்காக, மானசீகமாக நமக்குக் கூறி நிற்கின்றது.