113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை

விபச்சாரம் செய்த பெண்கள் மரணிக்கும் வரை அவர்களை வீட்டுக் காவலில் வையுங்கள் எனவும், அல்லாஹ் வேறு வழியைக் காட்டும்வரை தான் இச்சட்டம் செல்லும் எனவும் இவ்வசனம் (4:15) கூறுகிறது.

பின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டினான்.


விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை வழங்குமாறு கூறும் 24:2 வசனம் அருளப்பட்டவுடன் இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது.

Leave a Reply