15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

தம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தபோது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.


உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' என்று கேட்டு உறுதிமொழி எடுத்த செய்தி திருக்குர்ஆன் 7:172 வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

இன்று உலகில் வாழுகின்றவர்களும், இதற்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களும், இனி பிறக்கப்போகின்ற எல்லா மனிதர்களும் முதல் மனிதருக்குள் அடக்கமாகியிருந்தனர். முதல் மனிதனிடமிருந்தே ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் மரபணுக்களை வழிவழியாக மனிதன் பெற்றுக் கொள்கிறான் என்ற அறிவியல் உண்மையை நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்ற சொல் மூலம் இவ்வசனம் உணர்த்தி நிற்கிறது.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

Leave a Reply