195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் இவ்வசனத்தில் (8:41) சொல்லப்படுகிறது.

 

அதாவது போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவிகிதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினருக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், நாடோடிகளுக்கும் சேர்த்து இருபது சதவிகிதமும் என்று பிரிக்கப்பட வேண்டும்.

இதில் அல்லாஹ்வையும் குறிப்பிட்டிருப்பதால் அவனுக்கு ஒரு பங்கு என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஜகாத் நிதியிலிருந்து எதையும் தொடக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அவர்களுக்கும் அல்லாஹ் பங்கு ஒதுக்கினான்.

Leave a Reply