232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

வ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும்போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது.

நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.


இது அஜீஸின் மனைவியுடைய கூற்று எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இவ்வசனங்களில் இடம் பெற்றுள்ள சொற்கள் இது அவருடைய கூற்றாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

அவர் மறைவாக இருக்கும்போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற சொற்றொடரை அஜீஸின் மனைவி கூறியிருக்கவே முடியாது.

ஏனென்றால் அஜீஸின் மனைவி கணவருக்குத் துரோகம் செய்திருக்கிறார். தான் செய்த தவறை (முந்தைய வசனத்தில்) ஒப்புக் கொண்டும் இருக்கிறார். "நான் தான் தவறு செய்திருக்கிறேன், இவர் உண்மை சொல்கிறார்'' என்று கூறிவிட்டு, நான் எந்தத் துரோகமும் செய்யவில்லை என்றும் கூறுவாரானால் முதலில் கூறியதற்கு முரணாக ஆகிவிடும்.

எனவே "மறைவில் துரோகம் செய்யவில்லை'' என்று கூறுவதற்கு யூஸுஃப் தான் தகுதி படைத்தவர்.

52வது வசனம் யூஸுஃபுடைய கூற்று என்றால் என் உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை என்ற 12:53 வசனமும் யூஸுஃபுடைய கூற்றாகத்தான் இருக்க முடியும். இதை அஜீஸின் மனைவியின் கூற்று என்று கூறுவது தவறு என்பதை 52வது வசனத்தைக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

Leave a Reply