246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு

246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு 

இப்ராஹீம் நபியவர்கள் தமது குடும்பத்தினரைப் பாலைவனப் பெருவெளியில் குடியமர்த்திய இடம் இன்று 'மக்கா' எனப்படுகிறது. அந்தப் பாலைவனப் பகுதியில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்கான ஆலயத்தை முதல் மனிதர் ஆதம் (அலை) உருவாக்கினார்கள்.


அந்த ஆலயம் அமைந்த இடத்திற்கு அருகில் தமது குடும்பத்தை இப்ராஹீம் நபியவர்கள் குடியமர்த்தி விட்டு "பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிய வேண்டும்; உணவுகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தனர் என்று இவ்வசனம் (14:37) கூறுகிறது. அவர்கள் செய்த பிரார்த்தனையின் வெளிப்பாடாகத்தான் இன்றைய 'மக்கா' நகரத்தின் வளர்ச்சி அமைந்துள்ளது.

Leave a Reply