261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்

261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்

வ்வசனத்தில் (16:106) நிர்பந்திக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறைநம்பிக்கையைப் பாதிக்கும் சொற்களைக் கூறினால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வளைந்து கொடுப்பதற்கோ, இரட்டைவேடம் போடுவதற்கோ, அற்பமான ஆதாயத்திற்காக தவறான கொள்கையை அங்கீகரிப்பதற்கோ இஸ்லாத்தில் இடமில்லை.

ஆனால் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டவன் இறைநம்பிக்கையை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்து அதற்கு எதிரான சொல்லைக் கூறி தன் உயிரை, உடமையைக் காப்பாற்றிக் கொள்ளலாமா? என்றால் கொள்ளலாம் என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது.

கலவரச் சூழலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், உடமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் உள்ளத்து நம்பிக்கையில் சிறிது கூட சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாகப் பேசுவது குற்றமாகாது என இந்த வசனம் நெருக்கடியான காலகட்டத்திற்கும் வழிகாட்டி நிற்கிறது.

Leave a Reply