268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

பிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்காவின் பிரமுகர்கள் மிகக் குறைவாகவே அதன் பிறகு அவ்வூரில் தங்கியிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (17:76) அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரைவிட்டு விரட்டுவதற்குக் காரணமாக இருந்த அபூஜஹ்ல், உத்பா, ஷைபா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் முதல் போர்க்களத்திலேயே கொன்று குவிக்கப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விரட்டிவிட்டு அவர்கள் நீண்ட நாட்கள் அவ்வூரில் தங்கியிருக்க முடியாது என்ற இந்த முன்னறிவிப்பைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

Leave a Reply